இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-20 செயற்கைக்கோள்-ஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இஸ்ரோ, எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணில் செலுத்த உதவியை நாடியுள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்வெளித்துறைகளுக்கு இடையிலான ஒரு முக்கியமான கூட்டு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவும், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் பல முக்கியமான முயற்சிகளை விண்வெளி துறையில் செய்து வருகிறது, இஸ்ரோவில் பல முயற்சிகளை எலான் மஸ்க் பாராட்டியுள்ளார். இந்த நிலையில் இஸ்ரோ அமைப்பு தவிர்க்க முடியாத காரணத்தால் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது.

4,700 கிலோ எடையுள்ள ஜிசாட்-20 செயற்கைக்கோள், இந்தியாவின் தற்போதைய ஹெவி-லிஃப்ட் ராக்கெட்டான எல்விஎம்-3 இன் திறனை விட அதிகமாக உள்ளது. இதனால், அதிக உந்து திறன் கொண்ட ராக்கெட் தேவைப்பட்டது. இந்த ஜிசாட்-20 செயற்கைக்கோள்-ஐ பாகுபலி எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் 4 டன் அதாவது 4000 கிலோ எடை வரையில் விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது. எனவே ஜிசாட்-20 செயற்கைக்கோள் 4,700 கிலோ எடை கொண்டுள்ளதால் மாற்று லான்ச் வெஹிக்கல் தேவை.
இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட்-ஐ பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த ராக்கெட் 8.3 டன் வரையில் பேலோடு கொண்டு செல்லும் திறன் உள்ளது. இந்தப் பெரிய செயற்கைக்கோளை ஜியோஸ்டேஷனரி டிரான்ஸ்பர் ஆர்பிட் (eostationary transfer orbit) எனப்படும் நிலையில் கொண்டு சேர்க்க ஃபால்கன்-9 ராக்கெட் திறன் போதுமானதாக இருக்கும்.
இஸ்ரோ பொதுவாக பெரிய செயற்கைக்கோள்களை ஏவ ஐரோப்பாவின் அரியன்ஸ்பேஸை (Arianespace) நம்பியிருந்தது. ஆனால் அரியானே-5 ராக்கெட் ஓய்வு பெற்றதாலும், அடுத்த தலைமுறை ராக்கெட்டான அரியானே-6 பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தாலும் ஸ்பேஸ்எக்ஸ் உதவியை நாடியுள்ளது இஸ்ரோ. அரியானே-6 பயன்படுத்து கமர்சியல் ஸ்லாட் இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை.
இதேவேளையில் ரஷ்யா-வின் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அரசியல் சூழலில் தற்போது ரஷ்யா உடன் இணைந்து விண்வெளி துறையில் பணியாற்றுவது சிறந்தாக இருக்காது என்பதால், ஸ்பேஸ் எக்ஸ் இஸ்ரோ-வின் விருப்பமாக மாறியுள்ளது.
14 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்ட ஜிசாட்-20 செயற்கைக்கோள், 70 Gbit/s தரவு பரிமாற்ற திறன் கொண்ட சக்திவாய்ந்த கே-பேண்ட் உயர்-திறன் தகவல் தொடர்பு பேலோட் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்தும்.
இஸ்ரோவின் இந்த ஜிசாட்-20 செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் தொலைதூரப் பகுதிகளில் வேகமான இணைய இணைப்பை செயல்படுத்த முடியும். இந்த செயற்கைக்கோள் அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும், விமானங்களில் இணைய இணைப்பை கொண்டு வரவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிசாட்-20 மூலம் எதிர்கொண்ட பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரோ தனது அடுத்த தலைமுறை ராக்கெட் ஆன என்ஜிஎல்வி (Next Generation Launch Vehicle)யை உருவாக்கி வருகிறது. தற்போதைய எல்விஎம்-3 இன் 4 டன் திறனை மூன்று மடங்கு அதிகரிக்கும் வகையில் இந்த சக்திவாய்ந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ராக்கெட் இஸ்ரோ-வின் பயன்பாட்டு லிஸ்ட்டில் சேர்ந்தால் Arianespace, ஸ்பேஸ்எக்ஸ் உதவியை நாட வேண்டிய அவசியம் இருக்காது. இஸ்ரோ சொந்தமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்-ஐ விண்ணில் செலுத்த முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications