உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் மார்டன் உலகின் ஐன்ஸ்டீன் என பலரும் புகழ்ந்தாலும், அவர் ஒரு ஸ்மார்ட் பிஸ்னஸ்மேன் என்ற வட்டத்திற்குள்ளேயே அவரை அடக்க முயல்கின்றனர். இது எப்படியிருந்தாலும் பல தடைகளை உடைத்து தற்போது வெள்ளை மாளிகையில் டிரம்ப்-க்கு பக்கத்தில் சேர் போட்டு உட்காரும் அளவுக்கு அவருடைய செல்வாக்கு கார்ப்ரேட் உலகை தாண்டி அமெரிக்க அரசியல் வட்டாரத்திற்குள் நுழைந்துள்ளது.
ஒருபக்கம் 350 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரராகத் திகழும் எலான் மஸ்க், அரசியல் வட்டாரத்தில் எந்தொரு தொழிலதிபரும் அடைய முடியாத இடத்தை அடைந்து விட்டதால் இனி ஜாலி என ரெஸ்ட் எடுக்கவில்லை. இதன் நிறுவனத்தில் அடுத்தடுத்து புதிய தொழில்நுட்பத்தையும், சேவைகளையும் கொண்டு வந்துகொண்டு இருக்கிறார்.

எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவை பிரிவான ஸ்டார்லிங்க், புதிதாக நேரடி செல்போன் செயற்கைக்கோள் தொடர்பு (direct-to-cell satellite communications) என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த புதிய தொழில்நுட்பத்தால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் எல்லாம் ஆடிப்போய் உள்ளது.
உலகளாவிய டெலிகாம் தொடர்பில் மிகப்பெரிய முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளார் எலான் மஸ்க். Direct-to-Cell Satellite Communications என்பது தற்போது செயல்பட்டு வரும் டெலிகாம் டவர்கள் இல்லாமல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி டெலிகாம் சேவை அளிக்கும் புதிய தொழில்நுட்பமாகும்.
இதனால் தொலைதூர அல்லது சேவை குறைவான பகுதிகளில் தடையற்ற டெலிகாம் இணைப்பு கிடைப்பது மட்டும் அல்லாமல், இதை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் போது உலகில் எந்தொரு நாட்டிற்கு சென்றாலும் தடையற்ற டெலிகாம், இண்டர்நெட் சேவை ஒருவரால் பெற முடியும். இதனால் வேறு நாட்டில் வேறு சிம் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது.
இந்த புதிய தொழில்நுட்பம், உலகளாவிய டெலிகாம் சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் டெலிகாம் துறைக்கும் எப்போதும் பெரும் தலைவலியாக இருக்கும் டெலிகாம் டவர் உள்கட்டமைப்புகளை இனி நம்பியிருக்கும் அவசியம் இல்லை.
ஸ்டார்லிங்கின் direct-to-cell சேவை முதல்கட்டமாக அமெரிக்காவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் உடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஸ்டார்லிங்க், அமெரிக்காவில் டி மொபைல், கனடாவில் ராஜெர்ஸ், நியூசிலாந்தில் One NZ, ஜப்பான் நாட்டில் KDDI, ஆஸ்திரேலியாவில் Optus, சுவிஸ் நாட்டில் சால்ட் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
செயற்கைக்கோள் மற்றும் டெலிகாம் கட்டமைப்பு இணைவது மூலம் டெக் சேவையிலும், டெலிகாம் சேவையிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். டெலிகாம் துறையை தாண்டி விவசாயம், போக்குவரத்து மற்றும் அவசர சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சேவைகள் உருவாக வாய்ப்புகளை உருவாக்கும்.
Direct-to-Cell satellite communications சேவைக்கா ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் நெட்வொர்க்கை தற்போதுள்ள செல்லுலார் நெட்வொர்க்குகளுடன் ஒருங்கிணைத்து, பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சேவைக்காக 23 புதிய செயற்கைக்கோள்களை SpaceX இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த சேவை வெற்றிகரமான மாறினால் அடுத்தடுத்து பால்கான் 9 பறக்க துவங்கும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications