உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையில் இயங்கும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வில் அவ்வப்போது ஊழியர்கள் மீது நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை மிகப்பெரிய சர்ச்சையாகும். இதேபோல் இந்த முறை ஏற்பட்டுள்ள சர்ச்சை மிகவும் பெரியதாக உள்ளது.
உலகம் முழுவதும் வொர்க் லைப் பேலென்ஸ், பணியிடத்தில் மன அழுத்தம், பணிச் சுமை, நீண்ட நேரம் பணியாற்றுவது குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் வேளையில் டெஸ்லா நிர்வாகம், சிக் லீவ் (Sick Leave) எடுத்த ஊழியரின் வீட்டுக்கே சென்று உண்மையிலேயே அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதா என்று செக் செய்யப்பட்டு வருகிறதாம்.

எலான் மஸ்க்-ன் திறமையும், அவர் படைத்த சாதனைகள் அனைத்தும் நாம் அறிந்த ஒன்று தான், இதேவேளையில் அவரின் கண்டிப்பான நிர்வாகம், பணி சூழல் குறித்தும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இது முற்றிலும் மோசமான அணுகுமுறை எனப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டெஸ்லா தற்போது அமெரிக்கா, சீனா தாண்டி ஜெர்மனி நாட்டிலும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனி கார் தொழிற்சாலை மற்றும் நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கத்தை விடவும் அதிகமாக சிக் லீவ் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிக் லீவ் எடுத்துள்ள 30 ஜெர்மன் ஊழியர்களின் வீட்டிற்கு டெஸ்லா நிர்வாகம் ஆட்களை அனுப்பி செக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு டெஸ்லா நிறுவன ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த கார்ப்ரேட் ஊழியர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், டெஸ்லா ஜிகாஃபேக்டரி-ன் நிர்வாக தலைவர் ஆண்ட்ரே தியெரி, இத்தகைய நடைமுறை மிகவும் சாதாரணமானது என்று நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு சப்போர்ட் செய்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் மட்டும் டெஸ்லா பெர்லின் ஜிகாஃபேக்டரியில் சிக் லீவ் எடுத்துள்ளோர் எண்ணிக்கை 17% ஆக உயர்ந்தது, இது ஜெர்மன் ஆட்டோமொபைல் தொழில் துறையில் இருக்கும் சக நிறுவனங்களில் சராசரியாக 5% அளவில் மட்டுமே இருக்கும், ஆனால் டெஸ்லா-வில் சராசரி அளவை காட்டிலும் சுமார் 4 மடங்கு அதிகமாக உள்ளது.
ஏன் டெஸ்லா ஊழியர்கள் அதிகமாக சிக் லீவ் எடுக்கின்றனர் என்பதை கண்டறிய, பெர்லின் தொழிற்சாலையின் ஒரு பிரிவின் தலைவர், கடந்த ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறும் சிக் லீவில் இருக்கும் 30க்கும் அதிகமான ஊழியர்களை தனிப்பட்ட முறையில் சரிபார்க்க மேலாளர்களை அனுப்பியுள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications