உலக நாடுகளில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லா முன்னோடியாக இருந்தாலும் சீனாவில் மட்டும் டெஸ்லாவுக்குப் போட்டியாக 3க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் சீன எலக்ட்ரிக் கார் சந்தையில் டெஸ்லா-வின் ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்து BYD நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.
இந்த நிலையில் எலான் மஸ்க் முதல் முறையாகப் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால் முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் சீனாவில் விற்பனை செய்யப்படும் மாடல் 3 மற்றும் மாடல் Y கார்களின் விலையைப் போட்டியை சமாளிக்க 9 சதவீதம் வரையில் குறைத்துள்ளது.
விலை குறைப்பு
உலகளவில் ஆட்டோமொபைல் துறையில் டிமாண்ட் மற்றும் வர்த்தகம் குறைந்துள்ள நிலையில், சீனாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இதனால் விற்பனையை அதிகரிக்க டெஸ்லா உட்பட அனைத்து எலக்ட்ரிக் கார் நிறுவனங்களும் சீனாவில் தனது கார்களின் விலையைக் குறைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
டெஸ்லா மாடல் 3 மற்றும் மாடல் Y
இந்த விலை குறைப்புக்கான அறிவிப்பை டெஸ்லாவின் சீன இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது, 2022ல் முதல் விலை குறைப்பாக இது உள்ளது. இதேபோல் டெஸ்லா இன்சூரன்ஸ் திட்டத்திலும் புதிதாகக் கார் வாங்குபவர்களுக்குச் சலுகை கடந்த மாதம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா காலாண்டு முடிவுகள்
டெஸ்லா காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு எலான் மஸ்க் சந்தை ஆய்வாளர்களிடம் பேசுகையில், டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய வர்த்தகத் தளமாக இருக்கும் சீனா மற்றும் ஐரோப்பாவில் ரெசிஷன் பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான விற்பனையும், டிமாண்ட் கடுமையாகியுள்ளது என அறிவித்தார்.
கணிப்பு
2023 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கான விற்பனை மோசமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள வேளையில் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல் இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications