பெங்களூரு: ஆன்லைன் பதிவுகளை (content) நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய அரசு உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டி எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கிற்கு சொந்தமான சமூக ஊடக நிறுவனம் தான் எக்ஸ். இந்த எக்ஸ் தளமானது மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் மத்திய அரசு சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் டிஜிட்டல் பதிவுகளை தணிக்கை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79ஐ தவறாக பயன்படுத்துவதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறும் வகையிலும் ஆன்லைனில் கருத்து சுதந்திரத்தை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பிரிவு 69ஏ- வில் கோடிட்டு காட்டப்பட்ட கட்டமைக்கப்பட்ட சட்ட செயல்முறையை தவிர்த்து அரசு Parallel content blocking mechanism எனப்படும் வேகமான முறையில் பதிவுகளை தடுக்கும் முறையை உருவாக்க இந்த பிரிவை பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டுகிறது.
மத்திய அரசின் இந்த அணுகுமுறை ஸ்ரேயா சிங்கால் வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்கு முரணாக இருக்கிறது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் டிஜிட்டல் பதிவுகளை முறையான நீதித்துறை செயல்முறை அல்லது பிரிவு 69 ஏ வின் கீழ் வரையறுக்கப்பட்ட சட்டபூர்வமான பாதை மூலம் மட்டுமே தடுக்க முடியும் என கூறியது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி பிரிவு 79ஏ நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு உத்தரவிடும் போது சட்டவிரோதமான பதிவுகளை ஆன்லைன் தளங்கள் கட்டாயம் அகற்ற வேண்டும் என கூறுகிறது. ஒருவேளை குறிப்பிட்ட அந்த ஆன்லைன் தளம் அந்த பதிவுகளை 36 மணி நேரத்திற்குள் நீக்கவில்லை என்றால் பிரிவு 79 இன் கீழ் அந்த தளம் பெறக்கூடிய பாதுகாப்பை இழக்கும் அபாயம் ஏற்படும் என அதில் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிடுகிறது.
ஆனால் இந்த விளக்கத்தை எதிர்த்து தான் எக்ஸ் தளம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விதி அரசு சுதந்திரமாக சமூக வலைத்தளத்தில் இருக்கும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை வழங்கவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையான தணிக்கையை மேற்கொள்ள அதிகாரிகள் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக எக்ஸ் தளம் குற்றம் சாட்டியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ-வின் கீழ் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டால் டிஜிட்டல் பதிவுகளுக்கான பொது அணுகலை தடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இந்த செயல்முறை 2009 தகவல் தொழில்நுட்ப விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ஒரு கட்டமைக்கப்பட்ட மறு ஆய்வு செயல்முறை நடத்தப்பட வேண்டும் என கூறுகிறது.
ஆனால் இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் அரசு பிரிவு 79ஐ குறுக்கு வழியாக பயன்படுத்துகிறது அதாவது தேவையான ஆய்வுகளை நடத்தாமல் பதிவுகளை நேரடியாக அகற்ற உத்தரவிடுகிறது என எக்ஸ் தளத்தின் மனுவில் வாதிடப்படுகிறது. தன்னிச்சையாக அரசு தணிக்கை செய்வதை தடுப்பதற்கான சட்ட பாதுகாப்புகளின் நேரடி மீறலாக இதை பார்க்கிறோம் என எக்ஸ் தளம் கூறுகிறது.
மேலும் Sahyog தளத்திற்கு எதிராகவும் எக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்டது தான் Sahyog தளம். இது பிரிவு 79 இன் கீழ் பதிவுகளை நீக்கும் கோரிக்கைகளை நெறிப்படுத்தவும், சமூக ஊடக தளங்கள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கிடையே நேரடி தகவல்தொடர்புகளை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தளத்தில் தங்கள் ஊழியரை இணைக்க எக்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தளம் இரு தணிக்கை கருவியாக செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறது. முறையான சட்ட மறுஆய்வுகள் இல்லாமல் பதிவுகளை நீக்க தளங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக சாடியுள்ளது. நீதித்துறை மேற்பார்வை இல்லாமல் ஆன்லைனில் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மற்றொரு முயற்சி இது என எக்ஸ் தளம் வாதிடுகிறது.
மார்ச் 5ஆம் தேதியே எக்ஸ் தளம் இந்த வழக்கினை தாக்கல் செய்ததாகவும் அப்போது வழக்கு விசாரணை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications