எலான் மஸ்க் அடுத்த அதிரடி.. சொந்தமாக தனி விமான நிலையம் கட்ட முடிவு..!!

உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ் கடந்த 5 மாதத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார், ஒருபக்கம் விவகாரத்து, ஊழியருடன் கள்ளத் தொடர்பில் குழந்தை, கூகுள் நிறுவனர் செர்ஜி பிரினின் மனைவியுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டு எனப் பர்சனல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.

பிஸ்னஸ் பக்கம் திரும்பினால் டிவிட்டர் கைப்பற்ற அறிவித்துப் பின்னாளில் வெளியேறியது, டிவிட்டருக்காக டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தது, டெஸ்லா முதல் ஸ்பேஸ்எக்ஸ் வரையில் ஊழியர்கள் பணிநீக்கம், சீனாவின் உற்பத்தி சரிவு, டெக்சாஸ் மற்றும் ஜெர்மனி தொழிற்சாலையால் அதிகப்படியான செலவுகள் எனச் சுத்தி சுத்தி அடி வாங்கி வரும் எலான் மஸ்க் தொடர்ந்து அனைத்து வர்த்தகத்தையும் நிலையான வளர்ச்சி பாதையில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் தான் எலான் மஸ்க் புதிதாக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.

டெக்சாஸ்

டெக்சாஸ்

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பல பிரச்சனைக்கு மத்தியிலும் புதிய திட்டங்கள் குறித்து யோசிப்பது நிறுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எலான் மஸ்க் சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் அமைத்து இத்தொழிற்சாலை இயங்க துவங்கியுள்ளது.

பிரைவேட் விமான நிலையம்

பிரைவேட் விமான நிலையம்

இந்த நிலையில் இதே டெக்சாஸ் பகுதியில் எலான் மஸ்க் புதிதாகவும், சொந்தமாகவும் பிரைவேட் விமான நிலையத்தைக் கட்ட திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் அஸ்டின் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Bastrop-ல் இந்தப் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் போரிங் கம்பெனி ஆகியவை டெக்சாஸ் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள வேளையில் டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகத்தைச் சிலிக்கான் வேலி-யில் இருந்து டெக்சாஸ் பகுதிக்கு மாற்றப்பட்டது.

பிரைவேட் ஜெட்

பிரைவேட் ஜெட்

இதனால் எலான் மஸ்க் பெரு பகுதி நேரம் டெக்சாஸ் பகுதியிலேயே இருக்கும் காரணத்தாலும், பிற பகுதிகளுக்குச் செல்லும் போது தனது பிரைவேட் ஜெட் வாயிலாகத் தான் சென்று வருவதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

2100 ஏக்கர் நிலம்

2100 ஏக்கர் நிலம்

எலான் மஸ்க் மற்றும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் டெக்சாஸ் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்துள்ளது. உதாரணமாக ஜிகா டெக்சாஸ் தொழிற்சாலைக்கு மட்டும் சுமார் 2100 ஏக்கர் நிலம் உள்ளது. இதேபோல் ஸ்பேஸ்எக்ஸ் போக்காசிக்கா பகுதியில் அதிகப்படியான நிலத்தை வைத்துள்ளது.

அஸ்டின் நகரம்

அஸ்டின் நகரம்

இந்நிலையில் எலான் மஸ்க் டெக்சாஸ் மாநிலத்தின் அஸ்டின் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Bastrop-ல் சுமார் 585 ஏக்கர் நிலத்தில் புதிய விமான நிலையத்தை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

G700 விமானம்

G700 விமானம்

மேலும் எலான் மஸ்க்-யிடம் Gulfstream G650ER விமானம் உள்ளது, இதை விரைவில் G700 விமானத்திற்கு அப்கிரேட் செய்ய உள்ளார். G700 விமானத்தின் அடிப்படை விலை 78 மில்லியன் டாலர். மேலும் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றாள் கட்டாயம் FAA உட்படப் பல அமைப்புகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+