டிவிட்டரை வைத்து எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமோ, அனைத்து விதத்திலும் வருமானத்தை ஈட்டும் திட்டத்தில் இருக்கும் எலான் மஸ்க் பலரின் எதிர்ப்பை தாண்டி டிவிட்டர் ப்ளூ டிக் பெற 7.99 டாலர் அளவிலான தொகையை அறிவித்தார்.
இதை சாமானிய மக்கள் பெரிய அளவில் ஆதரித்தாலும், பிரபலங்கள் எதிர்த்து வருகின்றனர். இதனாலேயே பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் கணக்கின் பெயரை எலான் மஸ்க் என மாற்றினர். இது டிவிட்டர் தளத்தில் பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எலான் மஸ்க் வீடியோ கன்டென்ட் மூலம் அதிக வருமானத்தைப் பெற திட்டமிட்டு அதற்கான வழிகளை உருவாக்கி வருகிறார்.
வீடியோ கன்டென்ட்
உலகளவில் வீடியோ கன்டென்ட்-க்கு தற்போது அதிகப்படியான மக்கள் பயன்படுத்துவது யூடியூப் மற்றும் டிக்டாக். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட காரணத்தால் ரீல்ஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இதேவேளையில் பிரபலங்கள் மத்தியில் இன்ஸ்டா மற்றும் ஸ்னாப்சாட் வீடியோக்கள் அதிகப்படியான ஈர்ப்பை கொண்டு உள்ளது.
டிக்டாக் மற்றும் யூடியூப்
இந்த நிலையில் எலான் மஸ்க் கைப்பற்றியுள்ள டிவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இதில் வீடியோ கன்டென்ட் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக டிக்டாக் மற்றும் யூடியூப்-ன் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் எலான் மஸ்க்.
vine நிறுவனம்
2012ல் டிவிட்டர் நிறுவனம் கைப்பற்றிய vine நிறுவனத்தின் சேவையை டிவிட்டரில் மீண்டும் கொண்டு வரலாமா என எலான் மஸ்க் தனது டிவிட்டர் கணக்கில் வாக்கெடுப்பு நடத்திய நிலையில் 69.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
200 மில்லியன் வாடிக்கையாளர்கள்
Vine இணைய உலகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது, இன்று ஷாட் வீடியோ பிரிவில் பல நிறுவனங்கள் வந்திருந்தாலும் 2012ல் வெறும் 6 நொடி வீடியோ மூலம் பல 200 மில்லியன் வாடிக்கையாளர்களை இத்தளம் பெற்றது, ஆனால் பல்வேறு காரணங்களுக்காக vine சேவையை டிவிட்டர் 2019ல் மூடியது. இதற்கிடையில் டிக்டாக் ஷாட் வீடியோ பிரிவில் மிகப்பெரிய புரட்சியைச் செய்தது.
டிக்டாக் செயலி
அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் பாதுகாப்பு குறித்துப் பல சந்தேகம் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் டிவிட்டரில் vine சேவை டிக்டாக் போல் 15 நொடி முதல் 10 நிமிடம் வரையிலான வீடியோ சேவையைக் கொண்டு வந்தால் பெரிய அளவிலான போட்டியைப் பாதிப்பை டிக்டாக்-கிற்கு ஏற்படுத்த முடியும்.
நீண்ட நேர வீடியோ
அக்டோபர் 30ஆம் தேதி kerri gray என்பவர் டிவிட்டர் தளத்தில் நீண்ட நேரம் கொண்ட வீடியோ-வை அப்லோட் செய்யும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டதற்கு, எலான் மஸ்க் 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது எனக் கூறி யூடியூப் நிறுவனத்திற்கு எதிராகப் போட்டியை உருவாக்கினார்.
டிவிட்டர் மூலம் வருமானம்
டிவிட்டரை வைத்து எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமோ, அனைத்து விதத்திலும் வருமானத்தை ஈட்டும் திட்டத்தில் இருக்கும் இதேவேளையில், டிவிட்டர் மூலம் வருமானம் ஈட்டும் அனைத்து வாய்ப்பையும் மக்களுக்கு அளிக்கத் தயாராக உள்ளார் எலான் மஸ்க்.
55 சதவீத விளம்பர வருவாய்
யூடியூப் தனது கிரியேட்டர்களுக்கு 55 சதவீத விளம்பர வருவாய் தொகையை வருமானமாக அளிக்கிறது குவின் நெல்சன் என influencer கேட்ட நிலையில், எலான் மஸ்க் அவர்களை விட அதிக வருமானத்தை அளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
ப்ளூ டிக் கணக்காளர்கள்
இதன் மூலம் டிவிட்டர் தளத்தில் ப்ளூ டிக் பெற்ற கணக்காளர்கள் 1080P குவாலிட்டியில் 42 நிமிட வீடியோ பதிவிட முடியும், இந்த அளவீடு அடுத்த மாதம் நீட்டிக்கப்படும், இதன் மூலம் டிவிட்டர் வாடிக்கையாளர்கள் அனைவரும் நீண்ட நேரம் கொண்ட வீடியோவை பதிவிட முடியும் என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
பொதுவாக கிரியேட்டர்களுக்கு அதிக வருமானம், அதிக பார்வையாளர்களை ஈர்ப்பது மட்டுமே முக்கிய இலக்காகக் கொண்டு இருக்கும் நிலையில் எந்த தளமாக இருந்தாலும் மாற தயாராக இருப்பார்கள். இதனால் டிக்டாக் மற்றும் யூடியூப் தளத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தை டிவிட்டர் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications