எலான் மஸ்க் ட்விட்டரை கையக்கப்படுத்தியதை அடுத்து, அடுத்தடுத்த அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
குறிப்பாக முக்கிய தலைமை அதிகாரிகள் உள்பட பலரையும் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது இனியும் தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் ட்விட்டர் நிறுவனம் இன்னும் பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
50% பணி நீக்கம்
எலான் மஸ்க் ட்விட்டரில் 3700 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும், அதாவது 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்விட்டரின் புதிய உரிமையாளர் இது குறித்து நவம்பர் 4 ஆம் தேதியன்று ஊழியர்களுக்கு தெரிவிக்கலாம் என தெரிகிறது.
அலுவலகம் வாங்க
பணி நீக்கம் செய்த ஊழியர்கள் தவிர மீதமுள்ள ஊழியர்களை அலுவலகங்களுக்கு திரும்ப வருமாறும் கூறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் எலான் மஸ்க் நிறுவனத்தின் எங்கிருந்து வேண்டுமானாலும் பணி புரியலாம் என்ற கொள்கையை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செலவு குறைப்பு நடவடிக்கைகள்
இன்னும் சில புதிய நடைமுறைகள் பற்றியும் கூறப்படலாம் என தெரிகிறது. குறிப்பாக புதிய நடவடிக்கைகள் செலவினத்தை குறைக்கும் விதமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
மொத்தத்தில் ஊழியர்களுக்கு இன்னும் அடுத்தடுத்த செக் காத்துக் கொண்டுள்ளது என்றும் தான் கூற வேண்டும்.
இன்னும் பல கெடு
முன்னதாக ட்விட்டரின் இந்த நடவடிக்களை அடுத்து பல முக்கிய அதிகாரிகள் தாங்களாகவே பணியில் இருந்து ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர்.
மேலும் எலான் மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணியை முடிப்பதற்காக ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை, வாரத்தில் 7 நாட்களும் வேலை, விடுமுறை கிடையாது. கூடுதல் நேரம் பணிபுரிவதற்கு ஊதியம் பெறுவது குறித்து பேச முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் கையகப்படுத்தல்
கடந்த வாரத்தில் தான் ட்விட்டர் நிறுவனத்தினை 44 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கினார். அதனை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
ட்விட்டரின் நிறுவனத்தை நீண்ட இழுபறிக்கு பின்னர் வாங்கிய எலான் மஸ்க், அதன் ஒற்றை தலைவராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications