ட்விட்டர் அதிரடி முடிவு..25% ஊழியர்கள் பணி நீக்கமா.. இனி என்னவெல்லாம் நடக்குமோ?

ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கிய கையோடு அதிரடியான பற்பல மாற்றங்களை செய்து வருகின்றார் எலான் மஸ்க். நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் விதமாக பல்வேறு திட்டங்களையும் தீட்டி வருகின்றார்.

ட்விட்டரின் முதல் மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்றாக நிறுவனத்தினை வாங்கிய கையோடு, ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி உட்பட 4 முக்கிய புள்ளிகளை பணி நீக்கம் செய்தார்.

அது மட்டும் அல்ல, அடுத்தடுத்து பணி நீக்க நடவடிக்கை தொடரும் என்றும், பணி நீக்க நடவடிக்கையில் யாரெல்லாம் இருக்க போகிறார்கள் என்ற லிஸ்டையும் உயர் அதிகாரிகளுக்கு போட சொன்னதாக தகவல்கள் வெளியானது.

அடுத்தடுத்து நடவடிக்கை

அடுத்தடுத்து நடவடிக்கை

ஆரம்பத்தில் ட்விட்டரில் 75% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக கூறிய கருத்தினை மறுத்த எலான் மஸ்க் தரப்பு, எனினும் பணி நீக்கம் இருக்கும் என்று சூசகமாக கூறியிருந்தது. தற்போது அதனை மெய்பிக்கும் விதமாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது ட்விட்டரின் புதிய நிர்வாகம்.

பணி நீக்கம் குறித்து தீவிர ஆலோசனை

பணி நீக்கம் குறித்து தீவிர ஆலோசனை

தற்போது அடுத்து செய்யப்படவிருக்கும் பணி நீக்க நடவடிக்கைகள் குறித்து எலான் மஸ்க், தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 25% பணி நீக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், ஆக 25% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கறிஞர் தலைமையில் ஆலோசனை

வழக்கறிஞர் தலைமையில் ஆலோசனை

இது குறித்தான ஆலோசனையே எலான் மஸ்கிற்காக அடிக்கடி வாதாடும் பிரபல வழக்கறிஞர் ஆன அலெக்ஸ் ஸ்பிரோ தலையில் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

மேலும் அலெக்ஸ் சட்ட சிக்கல்கள், அரசாங்க உறவுகள், கொள்கை மற்றும் சந்தைப்படுத்தல் உள்பட பல துறைகளை நிர்வகிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நிர்வாகத்தில் பல முக்கிய நபர்கள்

நிர்வாகத்தில் பல முக்கிய நபர்கள்

இது தவிர இன்னும் சில முக்கிய நபர்களும் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வாஷிங்டன் போஸ்ட் செய்தியானது ட்விட்டர் ஊழியர்களில் 75% பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறியது. ஆனால் எலான் மஸ்க் அந்தளவுக்கு இருந்த நிலையில், தற்போது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் தங்கள் வேலையானது நிலைக்குமா? பணி நீக்கம் செய்யப்படுவோமா? என்ற பதற்றத்தில் மத்தியில் உள்ளனர் எனலாம்.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

தற்போது ட்விட்டரில் மொத்தம் 7500 பேர் பணி புரிந்து வருகின்றனர். ட்விட்டர் நிர்வாகம் அதன் ஊழியர்களை ஊக்கப்படுத்த , ஊழியர்களின் பொறுப்புக்கு ஏற்ப பங்குகளை வழங்குவதுண்டு. ஆனால் அத்தகைய பங்குகள் வழங்கப்படுவதற்கு முன்னரே பணி நீக்க நடவடிக்கையினை தொடங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+