உலகின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் பல துறையில் தொடர்ந்து புதுமைகளை படைத்து வரும் எலான் மஸ்க் எப்போதும் ஒரு படிக்கு மேல் என்பதை பல முறை நிருப்பித்து காட்டிய நிலையில்.. கடந்த சில வருடங்களாக முக்கியமான சில விஷயத்தில் பணியாற்றி வருகிறார், இதில் பெரும் வெற்றியை கண்டுள்ளார்.
எலான் மஸ்க் எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் என பல விஷயங்களில் அசத்தி வரும் வேளையில் சில நாட்களுக்கு முன்பு தனது நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்த அனுமதி பெற்ற நிலையில் பக்கவாதம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வாழ்க்கை பிறக்க உள்ளதாக நம்பப்பட்டாலும், இதுகுறித்து அதிகப்படியான விமர்சனங்கள் உள்ளது.

இப்படியிருக்கையில் சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் எலான் மஸ்க் ரோபோக்களை தயாரிக்கப்போவதாக பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பலரையும் வியக்க வைத்தது, இந்த நிலையில் எலான் மஸ்க் இதற்காக உருவாக்கிய டீம் அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் போல பணியாற்றி வேகமாக ஒரு ரோபோ கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே இந்த ரோபோ குறித்து பல வீடியோ, புகைப்படம் வந்தாலும், இந்த முறையில் எலான் மஸ்க் ரோபோ வணக்கம் செல்வது போலும் இப்புகைப்படத்திற்கு கீழ் நமஸ்தே என்று குறிப்பிட்டு வெளியிட்டு இந்தியர்களை கூடுதலாக மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் டிரெண்டாக்கியது மட்டும் அல்லாமல் எலான் மஸ்க்-ஐ அடுத்த அப்டேட் கொடுக்க தூண்டியுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்த சில மணிநேரத்தில் Optimus என பெயர் கொண்ட டெஸ்லா ரோபோ செய்யும் வேலைகளையும், அசைவுகளின் வீடியோ தொகுப்பையும் வெளியிட்டு உள்ளார். வீடியோவின் கடைசியில் Optimus ரோபோ யோகா கூட செய்கிறது.
இந்த வீடியோ மூலம் இதுவரை வெளியான ரோபோக்களில் Optimus டெஸ்லா ரோபோ மனித வடிவில் இருப்பது மட்டும் அல்லாமல் ஸ்டிபெரிலிட்டில் சிறப்பானதாக விளங்குகிறது. தற்போது டெஸ்லா ரோபோ டீம் இந்த ரோபோவின் புத்திக்கூர்மையை பல வகையில் மேம்படுத்தும் பணிகளை செய்து வருகின்றனர்.
எலான் மஸ்க் இந்த Optimus ரோபோக்களை தனது தொழிற்சாலையில் மட்டுமே பயன்படுத்துவதாக அறிவித்தாலும், இதன் செயல்பாடு, வெற்றியை கணக்கிட்டு வெளி நிறுவனங்களுக்கும் விற்க வாய்ப்பு உள்ளது. இத்தகைய ரோபோக்கள் கடினமான உற்பத்தி சூழ்நிலையில் பணியாற்ற முடியும்.
இதை தாண்டி எலான் மஸ்க் ஏஐ துறையில் தற்போது பணியாற்றி வரும் வேளையில் இது Optimus ரோபோ உடன் இணைந்தால் கூடுதல் சக்தி பெறும், ஆனால் எலான் மஸ்க் இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. எலான் மஸ்க் ஏஐ துறையில் பணியாற்ற முக்கியமான காரணம் சேட்ஜிபிடி தான்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications