எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா-வின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், அடுத்த வாரம் துவக்கத்தில் இந்தியாவுக்கு வர திட்டமிடப்பட்ட நிலையில் இந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.
இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் வேளையில் எலான் மஸ்க் வருகையும், டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங் சேவை அறிவிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்குச் சாதகமாக அமையும் என கணிக்கப்பட்டு இருந்த வேளையில், மஸ்க் திடீரென ஜகா வாங்கியுள்ளார்.
மூன்று நம்பகமான நபர்களிடம் இருந்து இந்த தகவல் கிடைத்துள்ளதாகச் சனிக்கிழமையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எலான் மஸ்க் தனது இந்தியப் பயணத்தை ஏன் ஒத்திவைத்தார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. டெஸ்லா நிறுவனம் மற்றும் பிரதமர் மோடி அலுவலகம் ஆகிய இரண்டு தரப்புகளிடமிருந்தும் இதுவரை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
ஏப்ரல் 10ஆம் தேதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எலான் மஸ்க் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்ட பின்னர், எலான் மஸ்க் தனது சமூக வலைத்தள பக்கமான X இல், "இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம், இந்த பயணம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஏன் திடீரென்று ஒத்திவைத்தார் என்பதற்கான காரணங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.
டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள், இந்திய அரசாங்கத்துடன் இறக்குமதி வரி குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராதது போன்ற காரணங்கள் இதற்குப் பின்னணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவில் 2-3 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை முதலீடு செய்வதாகவும், இந்த தொழிற்சாலைக்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலத்தில் நிலத்தை ஆய்வு செய்ய டெஸ்லா நிறுவனத்தின் சிறப்பு குழு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதை தாண்டி பல மாநிலங்கள் டெஸ்லா-வை நேரடியாகவும், மறைமுகமாவும் தொடர்பு கொண்டு உள்ளது.
ஆனால் டெஸ்லா டீம் இந்தியா வந்துள்ளதற்கான அறிவிப்புகளோ, தகவல்களோ இதுவரையில் வரவில்லை, நிலத்தை தேர்வு செய்வதில் தாமதம் இருக்கும் காரணத்தால் கூட எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
டெஸ்லா இந்தியாவில் அமைக்கும் தொழிற்சாலையில் கார் தயாரித்து, அதில் அதிகளவில் வெளிநாடுக்கு குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவை இரண்டுக்கும் தமிழ்நாடு சிறந்த தேர்வாக இருந்தாலும், குஜராத் அரசும், மத்திய அரசும் டெஸ்லா தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்ற முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் வாயிலாக கூட எலான் மஸ்க் இந்தியா பயணத்தை உறுதியான முடிவுகளுக்கு பின்பு எடுக்க முயற்சித்து இருக்கலாம். டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்ததை நீங்க எப்படி பார்க்குறீங்க, கமெண்ட்-ல சொல்லுங்க.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications