உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், அடுத்த வாரம் துவக்கத்தில் அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவுக்கு வர திட்டமிடப்பட்ட நிலையில் இந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.
எலான் மஸ்க்-ன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்திய பயணத்தை ஒத்திவைத்தது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விண்வெளி தொழில்நுட்ப துறையில் செயல்படும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எலான் மஸ்க் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
CNBC-TV18 வெளியிட்ட தகவலின்படி, ஏப்ரல் 22 ஆம் தேதி காலையில் பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் சந்திக்க உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மதியம் 4 மணிக்கு டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இந்திய விண்வெளி துறையைச் சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
விண்வெளி தொழில்நுட்ப துறையில் செயல்படும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிர்வாகிகள் தங்களது பெயர்களை வெளியிட விரும்பாமல், எலான் மஸ்க் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர் என மனிகன்ட்ரோல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி காலை வேளையில் இந்த தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என அவர்கள் கூறியுள்ளனர்.
முறையான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஏப்ரல் 20) மாலைக்குள் எங்களுக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எலான் மஸ்க் இந்திய பயணத்தின் போது பாரத் மண்டபத்தில் நடைபெற இருந்த இந்த சந்திப்பின் போது, எலான் மஸ்க் இந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் கம்பெனிகளின் தயாரிப்புகளையும், தொழில்நுட்பத்தையும் ஸ்டால்கள் மூலம் பார்வையிட்டு, அதன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
பாரத் மண்டபத்தில் நடைபெற இருந்த இந்த சந்திப்பில் Skyroot Aerospace, Dhruva Space, Piersight, Digantara, Satsure (அதன் துணை நிறுவனமான KaleidEO), மற்றும் GalaxEye உள்ளிட்ட பல்வேறு ஸ்பேஸ் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எலான் மஸ்க்-ஐ சந்திக்க உள்ளதாக் கூறப்பட்டது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications