எலான் மஸ்க் வாயால் கெட்ட டோஜ்காயின்.. 0.74 டாலரில் இருந்து 0.41 டாலர் வரை சரிவு..!

இந்திய முதலீட்டாளர்கள் முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் வரை கடந்த சில மாதங்களாக வியந்து பார்க்கும் மிக முக்கியமானதாக இருக்கும் டோஜ்காயின் விலை ஞாயிற்றுக்கிழமை மிகவும் மோசமாகச் சரிந்துள்ளது.

இந்த முக்கியமான சரிவுக்குக் காரணம் டோஜ்-ன் தந்தையாகக் கூறப்படும் எலான் மஸ்க் என்றால் மிகையில்லை.

அப்படி என்ன தான் ஆச்சு..?!

 SNL நிகழ்ச்சியில் எலான் மஸ்க்

SNL நிகழ்ச்சியில் எலான் மஸ்க்

சனிக்கிழமை இரவு எலான் மஸ்க் அமெரிக்காவின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான SNL-ல் சிறப்பு விருந்தினராகவும், டோஜ்காயினைப் பிரபலப்படுத்தவும், ஆதரவு அளித்துப் பேச உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நாள் முதல் டோஜ்காயின் மதிப்பும், டோஜ்காயின் முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் தாறுமாறாக உயர்ந்தது.

 டோஜ்காயின் சனிக்கிழமை வர்த்தகம்

டோஜ்காயின் சனிக்கிழமை வர்த்தகம்


இதன் வாயிலாகச் சனிக்கிழமை வர்த்தகத்தில் டோஜ்காயின் 0.59 டாலரில் இருந்து 0.74 டாலர் வரையில் உயர்ந்து வரலாற்று உச்ச அளவீட்டைப் பதிவு செய்தது. இதன் மூலம் டோஜ்காயினின் மொத்த சந்தை மதிப்பு 92 பில்லியன் டாலரைத் தாண்டியது. சனிக்கிழமை 0.74 டாலர் உச்சத்தின் மூலம் 2021ஆம் ஆண்டில் மட்டும் டோஜ்காயின் சுமார் 14,748.83 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை நிலைமை மொத்தமாக மாறியது.

 

 டோஜ்காயின் என்றால் என்ன..?

டோஜ்காயின் என்றால் என்ன..?

Saturday Night Live's (SNL) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எலான் மஸ்க்-கிடம் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் தொடர்ந்து டோஜ்காயின் என்றால் என்ன..? என்று தொடர்ந்து கேள்விகேட்டு வந்த நிலையில், பல பதில்களை அளித்தார் எலான் மஸ்க். இந்தப் பதில்களில் Hustle அதாவது நெருக்கித் தள்ளுவது அல்லது சலசலப்பு என்பது போன்று கூறினார். இந்த வார்த்தை முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 பிட்காயின் ஆதிக்கம்

பிட்காயின் ஆதிக்கம்

மேலும் அவர் பிட்காயினுக்கு எதிராகவும், பிட்காயின் ஆதிக்கத்தைத் தகர்க்க உருவாக்கப்பட்ட ஒரு கிரிப்டோகரன்சி டோஜ்காயின் என்று கூறினார் எலான் மஸ்க். உண்மையில் பிட்காயினிலும் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 டோஜ்காயின் முதலீடு

டோஜ்காயின் முதலீடு

இதைத் தொடர்ந்து எலான் மஸ்க், யாரும் தங்களது வாழ்நாள் சேமிப்பை டோஜ்காயினில் முதலீடு செய்ய வேண்டாம், அப்படிச் செய்வது சரியானதாக இருக்காது என்றும் தெரிவித்தார். கிரிப்டோகரன்சி மிகவும் உண்மையானது ஆனால் எச்சரிக்கையுடன் முதலீடு செய்யுங்கள் எனவும் கூறினார் மஸ்க்.

 மளமளவெனச் சரிந்த டோஜ்காயின்

மளமளவெனச் சரிந்த டோஜ்காயின்

இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்குள் 0.71 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட டோஜ்காயின் 0.66 டாலருக்கும், ஞாயிற்றுக்கிழமை காலையில் 0.41 டாலர் வரையில் குறைந்துள்ளது. இந்தச் சரிவு மூலம் பல முதலீட்டாளர்கள் டோஜ்காயின் மீதான நம்பிக்கையை இழந்து விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது.

 டோஜ்காயின் விலை

டோஜ்காயின் விலை

திங்கட்கிழமை வர்த்தகத்தில் டோஜ்காயின் மதிப்புச் சரிவில் இருந்து மீண்டு 0.41 டாலரில் இருந்து 0.54 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் அதிகளவிலான தடுமாற்றங்கள் உடன் டோஜ்காயின் வர்த்தகம் செய்யப்பட்டு வருவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+