எலான் மஸ்க்-ன் பிரம்மாண்ட முதலீட்டாளர் கூட்டணி.. வியப்பில் டெக் உலகம்..!

உலகின் முன்னணி சமுக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான நிதியைத் திரட்டி வரும் நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டு ஒட்டுமொத்த டெக் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

ஏற்கனவே டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ் கையில் மாட்டிக்கொண்டு என்ன ஆகபோகுதோ என இந்நிறுவன ஊழியர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், எலான் மஸ்க்-ன் வேகத்தால் பராக் அகர்வால் உட்படப் பல உயர் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக எலான் மஸ்க் ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் இருந்த டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து சுமார் 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்டியுள்ள நிலையில், மீதமுள்ள பணத்தைத் திரட்டும் முயற்சியில் எலான் மஸ்க் தனது சக டெக் உலகின் நண்பர்களிடம் முதலீட்டைத் திரட்டியுள்ளார்.

 முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான லேரி எலிசன், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான பினான்ஸ், சொத்து மேலாண்மை நிறுவனமான ஃபிடிலிட்டி, புரூக்ஃபீல்ட் மற்றும் சிகோயா கேபிடல் ஆகிய நிறுவனத்திடம் இருந்து சுமார் 7.14 பில்லியன் டாலர் தொகையை திரட்டியுள்ளார் எலான் மஸ்க்.

கடன் அளவு

கடன் அளவு

இதன் மூலம் எலான் மஸ்க் வாங்கும் மார்ஜின் லோன் அளவு பாதியாகக் குறைந்து சுமார் 6.25 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் ஈக்விட்டிக்கான தொகை 27.25 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மீதமுள்ள தொகை உலகளாவிய வங்கிகளின் மூலம் கடனாகப் பெற உள்ளார் எலான் மஸ்க்.

லேரி எலிசன்

லேரி எலிசன்

தற்போது எலான் மஸ்க் புதிதாகத் திரட்டியுள்ள 7.14 பில்லியன் டாலரில் 1 பில்லியன் டாலர் தொகையை ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான லேரி எலிசன் கொடுத்துள்ளார். இருவரும் ஹாலிவுட் படமான ஐயன் மேன் படங்களில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற முதலீட்டாளர்கள்

பிற முதலீட்டாளர்கள்

இதேபோல் சிகோயா கேப்பிட்டல் நிறுவனம் 800 மில்லியன் டாலரும், துபாய்-ஐ சேர்ந்த VyCapital 700 மில்லியன் டாலரும், பினான்ஸ் 500 மில்லியன் டாலாரும் கொடுத்து எலான் மஸ்க்-கின் கனவிற்கு உதவியுள்ளனர்.

சவுதி இளவரசர்

சவுதி இளவரசர்

இந்தப் பணத்தை வைத்து டிவிட்டர் நிறுவனத்தில் பங்குகளை வைத்துள்ள சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல்சாத், ஜாக் டோர்சி ஆகியோர் உட்படப் பிற முக்கியமான முதலீட்டாளர்களின் பங்குகளை வாங்க உள்ளார். இதிஸ் சவுதி இளவரசர் மட்டும் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+