எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அதிகப்படியான எதிர்ப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில் எலான் மஸ்க் கடுப்பாகி டிவிட்டரில் "தான் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டுமா..?" என்பதற்கான முடிவை மக்களிடம் கேட்க முடிவு செய்து டிவிட்டர் வாக்கெடுப்பு நடத்தினார்.
அமெரிக்காவில் தேர்தல் குறித்துப் பல விமர்சனங்களைப் பதிவு செய்த எலான் மஸ்க்-ன் டிவிட்டர் சிஇஓ பதவியை இந்தப் பொது வாக்கெடுப்பு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பலரும் நினைத்ததை படியே டிவிட்டர் மாற்றங்களை விரும்பாத மக்கள் அதிகமாக இருந்த காரணத்தால் எலான் மஸ்க் சிஇஓ பதவியை விட்டு வெளியேற மக்கள் வாக்களித்து உள்ளனர். இதைத் தொடர் எலான் மஸ்க் தற்போது தனது முடிவை அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் "தான் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டுமா..? என்ற கேள்விக்காக வாக்கெடுப்பில் சுமார் 1.7 கோடி பேர் வாக்குகளைப் பதிவு செய்தனர். இதில் 57.5 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என்று, 42.5 சதவீதம் பேர் இருக்க வேண்டாம் என்றும் பதில் அளித்துள்ளனர்.
சிஇஓ பதவி
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து கட்டாயம் வெளியேற வேண்டும் என வாக்களித்த நிலையில், எலான் மஸ்க் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில் தற்போது பதில் அளித்துள்ளார்.
டிவிட்டர் சிஇஓ பதவி
இந்த வாக்கெடுப்பு பதிவுக்குக் கீழ் எலான் மஸ்க், டிவிட்டர் சிஇஓ பதவியை ஏற்கும் அளவிற்கு யாரேனும் முட்டாள்தனமான நபரை தேர்வு செய்த உடனேயே இப்பதவியில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இப்பதவிக்குத் தன்னைவிடச் சிறந்த ஆள் யாரும் இல்லை என்பது போலும், வேறு யாராவது வந்தால் அவருக்கான அதிகாரம் மிகவும் குறைவாக இருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளார் எலான் மஸ்க்.
சாப்ட்வேர் மற்றும் சர்வர் அணி
டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ராஜினாமா செய்த பின்பு நிறுவனத்தை விட்டு வெளியேறுவாரா என்றால் கட்டாயம் இல்லை, இதே பதிவில் எலான் மஸ்க் சிஇஓ பதவியை ராஜினாமா செய்த பின்பு நான் சாப்ட்வேர் மற்றும் சர்வர் அணிகளை மட்டும் வழி நடத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ஆதிக்கம்
டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் எலான் மஸ்க் வைத்திருக்கும் நிலையில் நிர்வாக முடிவில் எலான் மஸ்க் ஆதிக்கம் செலுத்துவார். இதேபோல் டிவிட்டர் நிறுவனத்தில் எவ்விதமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான திட்டமிடலை டெக் பிரிவில் இருந்து எலான் மஸ்க் கொண்டு வர வாய்ப்புகள் அதிகம்.
ரப்பர் ஸ்டாப் பதவியா??
இந்த நிலையில் இதற்கு ஒப்புதல் அளிக்கவும், மறுப்பு (அதற்கு வாய்ப்பு இல்லை) தெரிவிக்கும் பணி மட்டுமே சிஇஓ-க்கு இருக்கும். இது கிட்டதட்ட ரப்பர் ஸ்டாப் பதவியாக இருக்கும். இப்போ சொல்லுங்க எலான் மஸ்க் டிவிட்டர் சிஇஓ பதவியை ஏற்க தயாராக இருக்கும் முட்டாள்தனமான நபர் கண்டுபிடிக்கும் வரையில் தான் சிஇஓ-வாக இருப்பார் எனச் சொல்வது சரியா தவறா என்று.
யார் அடுத்த சிஇஓ?
இல்லையெனில் எலான் மஸ்க் போலவே ஒரு திறமையான, அதேநேரம் கிறுக்குத்தனமான நபர் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டால் இன்னும் பல அதிரடிகளை டிவிட்டரில் பார்க்க முடியும். டிவிட்டரில் அடுத்த பெரிய கேள்வி யார் அடுத்த சிஇஓ என்பது தான்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications