ஆஸ்கர் விருதை கழுவி ஊத்தும் எலான் மஸ்க்.. என்ன நடந்தது..?!

சென்னை: ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கியது மட்டும் அல்லாமல் பல சர்ச்சைகளுடன் வந்ததுள்ளது. குறிப்பாக எலான் மஸ்க் கருத்து பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை இப்படத்தின் ஹீரோ சிலியன் மெர்பி வென்றார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றார், இப்படி மொத்தம் 7 விருதுகளை Oppenheimer வென்றுள்ளது.

ஆஸ்கர் விருதை கழுவி ஊத்தும் எலான் மஸ்க்.. என்ன நடந்தது..?!

மேலும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை இமா ஸ்டோன் வென்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்பி ஒரு வருதை மட்டுமே வென்றுள்ளது. இந்த நிலையில் எலான் மஸ்க் ஆஸ்கர் விருது குறித்து என்ன பேசினார்..?

எலான் மஸ்க் சமூக வலைத்தளமான X இல் ஆஸ்கர் விருதின் மதிப்பு குறைந்துவிட்டது, இதற்கு முன்பு இருந்த மதிப்பு, இப்போது இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். "இப்போது ஆஸ்கர் விருது வெல்வது என்பது வெறுமனே woke போட்டியில் வெற்றி பெற்றது போன்றது" என்று அவர் எழுதியுள்ளார்.

'woke' கருத்துகளை ஆதரிப்பவர்களுக்கான விருது என்ற நிலைக்கு ஆஸ்கர் விருது தள்ளப்பட்டிருப்பதால், இந்த விருதை பெறுபவர்கள் உட்பட அனைவருக்கும் இதன் மதிப்பு தெரியும். இதற்கு இனி மரியாதை கிடைக்காது என்று அடுத்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

woke என்பது 2010களில் உருவான ஆப்பிரிக்க-அமெரிக்க மக்கள் மத்தியில் உருவான ஒரு சொல். இந்த வார்த்தை இன தப்பெண்ணம் மற்றும் பாகுபாடுகளுக்கு எச்சரிக்கை குறிக்கிறது. பின்னாளில் இந்த சொல் இன அநீதி, பாலின வேறுபாடு மற்றும் LGBT உரிமைகள் மறுப்பு போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

கிரெட்டா ஜெர்விக்கின் "பார்பி" மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் "ஓப்பன்ஹைமர்" உள்ளிட்ட இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் 'woke' கருத்துகள் என்ன இருக்கிறது என்று மஸ்க் குறிப்பிடவில்லை.

எலான் மஸ்க் நிறுவனங்களில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DEI) ஆகியவற்றை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் வேளையில், தற்போது இவருடைய லிஸ்டில் ஆஸ்கர் விருதும் இணைந்துள்ளது.

DEI என்பது வெறும் இனவெறியின் மறுபெயர் தான். இதைப் பயன்படுத்துபவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று மஸ்க் ஜனவரி மாதம் தனது டிவிட்டரில் எழுதியிருந்தார். இதைப் பார்க்கும் போதும் ஆஸ்கர் விருதும் WOKE கருத்தைச் சார்ந்து இயங்குவதால், இதை மதிப்பற்றது என எலான் மஸ்க் கூறுவதாகத் தெரிகிறது.

கடந்த மாதம், பயனர்கள் கூகுளின் ஜெமினி சாட்போட்டின் பட உருவாக்கம் "woke" தன்மை கொண்டது என்று குற்றம் சாட்டிய பின்னர், எலான் மஸ்க் கூகுளை கடுமையாக விமர்சித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+