உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் CEO ஆன எலான் மஸ்க்கிற்கு, இதுவரை உலக வரலாற்றில் எந்த ஒரு நிறுவனத் தலைவருக்கும் வழங்கப்படாத மிகப் பெரிய ஊதியத்தை கொடுக்க இந்நிறுவனதின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ஒரு டிரில்லியன் டாலர், இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.82 லட்சம் கோடி மதிப்பிலான சம்பளத்தை கொடுக்க நேற்று (நவம்பர் 6) ஆஸ்டினில் நடைபெற்ற டெஸ்லாவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்கள் சற்ரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான ஆதரவை அளித்துள்ளனர்.
AI வளர்ச்சிக்கு மஸ்க் தேவை: எலான் மஸ்க், டெஸ்லாவின் எதிர்காலத் திட்டங்களான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி, உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பிரம்மாண்ட ஊதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெகா சம்பள திட்டத்திற்கு 75%-க்கும் அதிகமான பங்குதாரர்கள் ஆதரவு அளித்துள்ளனர். மேலும், இந்தச் சலுகையைப் பெறுவதன் மூலம், மஸ்க் குறைந்தது ஏழரை ஆண்டுகள் டெஸ்லாவில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அத்துடன், நிறுவனத்தில் அவரது பங்குதாரர் உரிமை 25%-க்கும் அதிகமாக உயரும்.

டெஸ்லாவை விட்டு தான் விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று மஸ்க் முன்னதாகவே மறைமுகமாக எச்சரித்திருந்தார். நிறுவனத்தின் வளர்ச்சியில் தனக்கு முழுமையான அதிகாரம் தேவை என்றும், அதற்கு ஏற்ப தனது பங்குதாரர் உரிமை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். எலான் மஸ்க் விலகினால் டெஸ்லா பங்குகள் பெரிய அளவில் சரிந்துவிடும் என்று நிர்வாக தலைவர் ராபின் டென்ஹோம் எச்சரித்ததன் பின்னணியில், பங்குதாரர்கள் இந்த முடிவை ஆதரித்துள்ளனர்.
ஊதியத்தை பெற கடினமான நிபந்தனைகள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்-கிற்கு இந்த ரூ.82 லட்சம் கோடி முழுமையாகக் கிடைக்க வேண்டுமானால், டெஸ்லாவின் சந்தை மதிப்பில் 12 முக்கியமான மைல்கற்களை அவர் அடைய வேண்டும். டெஸ்லாவின் தற்போதைய மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த ஊதியத் தொகுப்பின் முதல் பகுதி கிடைக்க வேண்டுமென்றால், டெஸ்லாவின் மதிப்பு 2 டிரில்லியன் டாலரை (இரண்டு லட்சம் கோடி டாலரை) எட்ட வேண்டும். மேலும், 20 மில்லியன் டெஸ்லா கார்களை விநியோகிப்பது போன்ற கடுமையான இலக்குகளையும் அவர் பூர்த்தி செய்ய வேண்டும். இப்படி 12 இலக்குகள் அடைந்தால் மட்டுமே எலான் மஸ்க்கிற்கு 1 டிரில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும்.
இது ஒருபுறம் இருக்க, எலான் மஸ்கிற்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டதை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். "டெஸ்லாவின் கார் விற்பனை குறைந்துள்ள நிலையிலும், பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், அவருக்கு இந்த ஊதியம் அளிப்பது நியாயமற்றது" என்று 'டெஸ்லா டேக் டவுன்' போன்ற சமூக ஆர்வலர்கள் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அவர்கள், இது ஒரு தோல்விக்காக கொடுக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த பரிசு என்றும் விமர்சித்துள்ளனர். எது எப்படியிருந்தாலும், டெஸ்லாவின் பங்குதாரர்கள் மஸ்க்கின் தலைமைக்குத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications