மீண்டும் முதல் இடம்.. விட்ட இடத்தை பிடித்தார் எலான் மஸ்க்.. எப்படி.. எவ்வளவு சொத்து மதிப்பு..?!

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை அச்சத்தின் மத்தியில், சந்தையில் பெரும் ஏற்ற இறக்கம் என்பது நிலவி வருகின்றது. இதற்கிடையில் பெரும் பில்லியனர்கள் பலரும் தங்களது சொத்து மதிப்பில் கடும் சரிவினைக் கண்டு வருகின்றனர் எனலாம்.

குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு கடும் சரிவினைக் கண்டது.

டெஸ்லா

டெஸ்லா

எனினும் தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 100% உயர்ந்த பிறகு எலான் மஸ்க் மீண்டும், உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உருவெடுத்துள்ளார். கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான நிகர மதிப்பு 200 பில்லியன் டாலர்களுக்கு கீழாக குறைந்தது.

மிகப்பெரிய பணக்காரர்

மிகப்பெரிய பணக்காரர்

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் பிரெஞ்சு சொகுசு பிராண்டான லூயிஸ் உயிட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்கினை பின்னுக்கு தள்ளினார்.

எலானின் சொத்து மதிப்பு

எலானின் சொத்து மதிப்பு

இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது பங்குகள் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

தரவுகளின் படி திங்கட்கிழமை நிலவரப்படி சந்தைகள் முடிவுக்கு பிறகு எலான் மஸ்கின் நிகர மதிப்பு சுமார் 187.1 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதே பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பான 185.3 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது.

பங்கு விலை ஏற்றம்

பங்கு விலை ஏற்றம்

நடப்பு ஆண்டில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பானது நடப்பு ஆண்டில், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலையானது 70% அதிகரித்துள்ள நிலையில் வந்துள்ளது. டெஸ்லாவின் பங்கு விலையானது அதன் ஜனவரி 6 அன்று தொட்ட குறைந்தபட்ச விலையில் இருந்து 100% ஏற்றத்தினை கண்டுள்ளது.

மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

தொடர்ந்து பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், அமெரிக்காவின் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றது. இதற்கிடையில் பொருளாதாரம் என்பது மெதுவான வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதற்கிடையில் முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளில் முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இது பங்குகள் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

தினசரி இழப்பு

தினசரி இழப்பு

குறிப்பாக எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தினை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய பிறகு, தொடர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்பானது கணிசமான சரிவினைக் கண்டது. தான் ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கியதில் இருந்து தினசரி 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கை

பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கை

ட்விட்டரை வாங்கியதில் இருந்து பெரும் மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், குறிப்பாக பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது. குறிப்பாக ப்ளூ டிக், கோல்டன் என பல அம்சங்களையும் அறிமுகம் செய்தது. இது தவிர இன்னும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எது எப்படியோ தற்போது மீண்டும் மக்களின் நம்பிக்கையை திரும்ப பெற தொடங்கியுள்ளார் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+