மேப்பிங், டிஜிட்டல் பணப்பரிமாற்றம், ஆட்டோமொபைல், சோலார், விண்வெளி ஆராய்ச்சி, அதிவேக பயணம் என ஒவ்வொரு துறையிலும் தனக்கான இடத்தைப் பிடித்து உலக மக்களை ஆச்சரியப்படுத்தி வரும் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
S&P500 குறியீட்டில் டெஸ்லா
டிசம்பர் 21ஆம் தேதி டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவின் S&P500 குறியீட்டின் கீழ் சேர்க்க உள்ளதை அடுத்து, இந்நிறுவனப் பங்குகள் தொடர் வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதன் காரணமாக எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் டாலர் அதிகரித்துச் சுமார் 167.3 பில்லியன் டாலரை அடைந்துள்ளது.
70 சதவீதம் வளர்ச்சி
நவம்பர் 16ஆம் தேதி S&P500 குறியீட்டின் கீழ் சேர்க்க உள்ளதாக வெளியான அறிவிப்புக்குப் பின் இந்நிறுவன பங்குகள் சுமார் 70 சதவீதம் வளர்ச்சி அடைந்து டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 658 பில்லியன் டாலராக உயர்ந்தது.
எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு
எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்புப் பெருமளவில் டெஸ்லா பங்குகளைத் தொடர் புடையாக இருக்கும் நிலையில் இவரது சொத்து மதிப்பு மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
2020ல் டெஸ்லா பங்குகள்
டெஸ்லா பங்குகள் 2020ல் மட்டும் சுமார் 731 சதவீதம் வளர்ச்சி அடைந்து வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சுமார் 695 டாலரை அடைந்துள்ளது. இதனால் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 2020ல் மட்டும் 139.7 பில்லியன் டாலர் உயர்ந்து இவரது மொத்த சொத்து மதிப்பு 167.3 பில்லியன் டாலரை அடைந்துள்ளது.
பில் கேட்ஸ் வீழ்ச்சி
இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியில் 2வது இடத்தில் இருந்து பில் கேட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
நீண்ட காலமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் பில் கேட்ஸ். ஆனால் அவரது முதலிடத்தை அமேசான்.காம் நிறுவனத்தின் ஜெப் பிசோஸ் கைப்பற்றி அந்த இடத்திற்கு உயர்ந்தார். இந்த நிலையில் தற்போது கேட்ஸ் மேலும் கீழே தள்ளப்பட்டு 3வது இடத்திற்குப் போய் விட்டார், மஸ்க் 2வது இடத்தை பிடித்து விட்டார்.
முதல் இடம் யாருக்கு..?
அதேசமயம், விரைவில் பிசோஸையும், மஸ்க் முந்தி முதலிடத்தைப் பிடிப்பார் என்று தெரிகிறது. 187 பில்லியன் டாலர் சொத்துகளுடன் ஜெப் பிசோஸ் இருக்கிறார். 167.3 பில்லியன் டாலர் சொத்துகளுடன் மஸ்க் 2வது இடத்தில் இருக்கிறார். இருவருக்கும் இடையே தற்போது முதலிடத்திற்கு மிகப்பெரிய போட்டி உருவாக உள்ளது.
அமேசான் நிறுவனம் ஈகாமர்ஸ், டெக் துறையைத் தாண்டி பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது போல் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ், ஹைப்ர்லூப், போரிங் கம்பெனி எனப் பல நிறுவனங்களை உருவாக்கி பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications