தினமும் வியப்பில் ஆழ்த்தும் தொழிலதிபராக இருக்கும் எலான் மஸ்க் தற்போது ஏஐ துறையில் அதிகப்படியான கவனம் செலுத்துவது மட்டும் அல்லாமல் உலகிலேயே யாரும் செய்திடாத வகையில் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்பியூட்டரை xAI நிறுவனத்திற்காக உருவாக்கி வருகிறார். இந்த நிலையில் ஏஐ சார்ந்து புதிய சேவைகளை எப்படியெல்லாம் கொண்டு வரலாம் என்பதை யோசித்து வரும் எலான் மஸ்க்கிற்கு 3 வருடம் முன் செய்த சத்தியம் நினைவுக்கு வந்துள்ளது.
எலான் மஸ்க் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவுள்ளார். மஸ்க், 2022 ஆம் ஆண்டு டிவிட்டரை வாங்கிய துவக்கத்தில் இத்தளத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார், இதில் பிரபல ஷாட் வீடியோ தளமான வைன் (Vine) மீண்டும் கொண்டு வர வேண்டுமா என்று மக்களிடம் கேள்வி கேட்டார்.

இந்த கருத்துக்கணிப்பிற்கு, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்குகளை அளித்தனர், இது அப்போதே இணையத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இப்போது இதற்கான நேரம் வந்துவிட்டதாக உணர்ந்த எலான் மஸ்க், vine-ஐ பயன்பாட்டுக்கு கொண்டு வர தயாராகி உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
Vine ஏற்கனவே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம், இன்று யூடியூப் ஷார்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல் போன்றவைக்கு முன்பாக ஷாட் வீடியோவில் மாஸ் காட்டிய ஒரு செயலி. இதை டிவிட்டர் வாங்கிய நிலையில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யமல் கிடப்பில் போட்டது. தற்போது எலான் மஸ்க் இதை ஏஐ உதவியுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக எலான் மஸ்க் தனது டிவிட்டரில் "We're bringing back Vine, but in AI form," என அறிவித்தார்.
வைன், 2012 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த செயலி மக்கள் மத்தியில் மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானது. அதே ஆண்டு ட்விட்டரால் கையகப்படுத்தப்பட்டது. இந்த வைன் தளத்தில் வீடியோ அனைத்தும் வெறும் ஆறு நொடிகள் மட்டுமே இருக்கும். இத்தளத்தில் பூனை மற்றும் நாய் குட்டி வீடியோ மிகவும் பிரபலம். இன்றளவும் யூடியூப்-ல் பல வைன் வீடியோ தொகுப்பை மக்கள் பார்த்து, ரசித்து வருகின்றனர்.
வைன் அப்போதே பல பிரபலங்களை ஈர்த்து, இதேபோல் பல வைரல் டிரெண்ட்-ஐ உருவாக முக்கிய காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. ஆனால் வைன் தளம் பல்வேறு நிர்வாக பிரச்சினைகள், குறிப்பாக கிரியேட்டர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் முதலீடு இல்லாதது காரணமாக, 2016 ஆம் ஆண்டு வைன் மூடப்பட்டது.
எலான் மஸ்க் உதவியால் தற்போது மீண்டும் வைன் உதயமாகிறது. வைன் எத்தனை பேருக்கு நினைவிருக்கு.. கமெண்ட் பண்ணுங்க.
இறுதியாக எலான் மஸ்க் வைன் செயலி எப்படியிருக்கும் என்பதை விளக்கமாக அறிவிக்கவில்லை, ஆனால் ஏஐ துணையுடன் வரும் என்பதை உறுதி செய்துள்ளார். வைன் தளத்தின் அடிப்படை மாறாமல் அறிமுகம் செய்யப்படும் என்றால் இது கட்டாயம் ஷாட் வீடியோ தளமாக தான் இருக்கும். டிவிட்டர் (எக்ஸ்) நீண்ட காலமாக வீடியோ பிரிவில் புதுமையை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது Vine அறிமுகம் யூடியூப் ஷார்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல் போன்றவைக்கு போட்டியாக இருக்க வாய்ப்பு அதிகம்.


Click it and Unblock the Notifications