வம்பை விலைகொடுத்து வாங்கும் எலான் மஸ்க்.. டெஸ்லா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை இணைக்கும் திட்டம்.. ஏன்..?!

உலக பல முக்கிய தொழில்நுட்ப புரட்சியைத் தனது நிறுவனத்தின் மூலம் உருவாக்கிய எலான் மஸ்க் அடுத்தொரு பிரம்மாண்ட திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைப்பது மூலம் 3.5 டிரில்லியன் டாலர் என்ற உலகிலேயே மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

எலான் மஸ்க் வெறுமென ஒரு திட்டத்தை அறிவிக்கவோ அல்லது மக்கள் மத்தியில் அதிரடி கிளப்பவோ எலான் மஸ்க் பேசுவது கிடையாது. எலான் மஸ்க் தற்போது மிகப்பெரிய இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் தொழில்நுட்ப ரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் பலன் கொடுக்கும் என்ற முக்கிய இலக்குடன் டெஸ்லா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இணைப்பு குறித்துப் பேசியுள்ளார்.

வம்பை விலைகொடுத்து வாங்கும் எலான் மஸ்க்.. டெஸ்லா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை இணைக்கும் திட்டம்.. ஏன்..?!

அதாவது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பல்வேறு புதுமைகளைச் சமீபத்தில் அறிமுகம் செய்த பறக்கும் ரோட்ஸ்டர் கார், ஆப்டிமஸ் என்ற humanoid robots, எனர்ஜி, அதிநவீன உற்பத்தி தொழில்நுட்பம் ஸ்டோரேஜ் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களை நிர்வாகம் செய்தும் டெஸ்லா நிறுவனத்தையும், விண்வெளி, ஏஐ, ஸ்டார்லிங்க், டேட்டா சென்டர், செயற்கைக்கோள் வாயிலாக இண்ட்நெட் போன்ற திட்டங்களை நிர்வாகம் செய்யும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் இணைப்பது மூலம் பல வகையில் நன்மை அளிக்கும் என தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.

சமீபத்தில் டெஸ்லா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அதிகரித்துள்ள சிப் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சொந்தமாக terrafab என்ற நிறுவனத்தை டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், இன்டெல், XAi கூட்டணியில் உருவாக்கப்பட்டு உள்ளது.

Also Read

இதேபோல் டெஸ்லாக கார்களும், ரோபோ டாக்சி சேவைகளும் ஸ்டார்லிங்க் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறது. நிலத்திலும், வானத்திலும் டேட்டா சென்டர் அமைப்பது குறித்து திட்டத்தில் எலான் மஸ்க் கீழ் இருக்கும் நிறுவனத்தின் அனைத்து தொழில்நுட்ப அதிகாரிகளும் பணியாற்றி வருகிறார்கள். இது மட்டும் அல்லாமல் humanoid robots தயாரிப்பிலும் XAi, டெஸ்லா இணைந்து பணியாற்றி வருகிறது.

இப்படி தொழில்நுட்ப ரீதியாகவும், இன்ஜினியரிங் திறன், உள்கட்டமைப்பு தேவைக்காக இணைந்து பணியாற்றும் நிறுவனங்கள் ஒன்றாக இருக்கும் போது நிதி ஒதுக்கீட்டை மிகவும் சிறப்பான முறையில் செய்ய முடியும் என எலான் மஸ்க் நம்புகிறார்.

உதாரணமாக டெஸ்லா கார்களுக்கான சிப்கள், XAi சேவைக்கான சிப்கள், ரோபோக்களுக்கான சிப்கள் இப்படி பல கருவிகளும் தேவையான அனைத்து சிப்களையும் வெளியில் இருந்து வாங்காமல் நிறுவனத்திற்குள்ளேயே தயாரிக்கும் திட்டமான terrafab-க்கா 100 மில்லியன் சதுரடியில் உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையை அமைய உள்ளது. இத்திட்டத்திற்கான நிதியை இணைந்து ஒரே நிறுவனமாக முதலீடு செய்யும் போது நிதிச் சுமை ஏற்படாது.

Recommended For You

இதேபோல் எலான் மஸ்க் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளையும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் வாக்கு அளிக்கும் உரிமையை வைத்திருக்கும் காரணத்தால் இணைக்கப்பட்ட நிறுவனத்திலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.

இதேபோல் முதலீட்டாளர்களுக்கும் எலான் மஸ்க்-ன் அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பங்கு பெறும் வாய்ப்பை உருவாக்கும். இதனால் 3.5 டிரில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியத்திற்கு இந்த இணைப்பு கட்டாயம் பலமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் பிரச்சனை இருக்கு..

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மிகவும் நுட்பமான பிரிவில் பணியாற்றி வருகிறது, குறிப்பாக நாசா, அமெரிக்க ராணுவம், இன்டலிஜென்ஸ் பிரிவு என பல பிரிவில் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறது.

மறுபக்கம் டெஸ்லா சீன சந்தையையும், சீனாவில் தொழிற்சாலை வைத்தும் இயங்கி வருகிறது. இத்தகைய நிலையில் இரு நிறுவனங்களின் இணைப்பு என்பது பாதுகாப்பு அச்சத்தை இரு நாடுகளுக்கும் உருவாக்கும் என்பதால் இது உலகளாவிய சந்தை அளவில் பிரச்சனைகளை உருவாக்கும்.

இதேபோல் ஸ்டார்ஷிப், ரோபோடாக்சிகள், ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள், மொபைல் தொடர்புகள் மற்றும் ஸ்டார்லிங்க் என அனைத்துமே ஆபத்து நிறைந்த அதிக நிதி சுமை கொண்ட தொழில்நுட்பமாக இருக்கும் போது, இதில் ஏதேனும் ஒரு துறையில் தோல்வி அடைந்தால் மொத்த சாம்ராஜ்ஜியமும் முடக்கம்.

இதேபோல் நிதி தேவை அதிகம் கொண்ட துறைகளாக இருக்கும் காரணத்தால் ஒரு துறைக்கு அதிகம் முதலீடு செய்வது மூலம் மற்ற நிறுவனங்கள் குறிப்பாக டெஸ்லாக, ஸ்டார்லிங்க் போன்ற எளிதாக நிதி திரட்டும் பிரிவின் வளர்ச்சியை முடக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதால்..

ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா இணைப்பு என்பது வம்பை விலைகொடுத்து வாங்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது எலான் மஸ்கிற்கு 1 டிரில்லியன் டாலர் சம்பளம் பெறுவதற்கு சில முக்கியமான இலக்குகள் உள்ளது, இதை அடையவே எலான் மஸ்க் அதிரடியான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+