சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகம் அடைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஓபன்ஏஐ நிறுவனம் முதன்முறையாக சாட் ஜிபிடி என்ற ஜெனரேட்டிவ் ஏஐ செயலியை அறிமுகம் செய்தது. சாட்பாட் அடிப்படையிலான இந்த செயலி உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டது. இதன் மூலம் உலக மக்கள் அனைவருமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பரவலாக அறிந்து கொண்டனர்.
தற்போது பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் எலான் மஸ்க் எக்ஸ்ஏஐ (XAI) என்ற பெயரில் ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் கிராக் (Grok chatbot) என்ற பெயரில் ஒரு சாட் பாட்டை உருவாக்கியிருக்கிறது. சாட் ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏஐ ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த கிராக் செயலி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தான் சீனாவை சேர்ந்த நிறுவனம் டீப்சீக் என்ற ஏஐ செயலியை அறிமுகம் செய்து அமெரிக்க நிறுவனங்களை எல்லாம் திக்குமுக்காட வைத்தது. இந்த நிலையில் இந்த செயலிகளுக்கெல்லாம் போட்டியாக இருக்கும் வகையில் எக்ஸ் ஏஐ நிறுவனம் கிராக்கை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாடல்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் டியூட்டர்களை நியமனம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் ஏஐ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பிசினஸ் இன்ஸைடருக்கு அளித்துள்ள பேட்டியில் ஐந்து பிரிவுகளில் தற்போது ஆட்களை வேலைக்கு தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. சட்டபூர்வமான மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களையும் பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தங்கள் நிறுவனம் 900 டியூட்டர்களை வேலைக்கு சேர்த்திருப்பதாக கூறியுள்ள ஊழியர்கள், மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏஐ டியூட்டர்களை பணிக்கு அமர்த்த இருப்பதாக கூறியுள்ளனர்.
ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் செயல்படக்கூடிய லாங்குவேஜ் மாடல்களுக்கு எல்லாம் டேட்டா அனடேட்டர் எனப்படும் ஏஐ டியூட்டர்கள் கட்டாயம் தேவை. பயனர்களின் கேள்விகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு புரியக்கூடிய விதத்தில் பதிலளிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற டியூட்டர்களைக் கொண்டு அவற்றுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியமாகும்.
கடந்த மாதம் தான் எலான் மஸ்க் தங்களுடைய நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களை பணிக்கு தேர்வு செய்திருப்பதாக எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஹார்ட் கோர் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தங்களுடைய ரெஸ்யூமை மெயிலில் அனுப்பும்படி அவர் கூறியிருந்தார். எலான் மஸ்கின் மற்றொரு நிறுவனம் டெஸ்லா பாட் என்ற பெயரில் ஆப்டிமஸ் என்ற மனித வடிவிலான ரோபோவை உருவாக்கி வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications