உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றுவதாக அறிவித்தாலும் போலி கணக்கு விபரங்கள் கொடுக்கப்படாத நிலையில் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான டீல்-ஐ ரத்துச் செய்வதாக அறிவித்தார்.
பல மாத போராட்டத்திற்கு பின் எலான் மஸ்க் அறிவித்த அதே 44 பில்லியன் டாலர் தொகைக்கு டிவிட்டரை வாங்குவதாக அறிவித்துள்ள நிலையில் டிவிட்டர் நிர்வாகத்திற்குக் கொண்டாட்டமாக உள்ளது, ஆனால் டிவிட்டர் ஊழியர்களுக்கு இல்லை.
இந்த நிலையில் எலான் மஸ்க்-ன் முன்னாள் மனைவி டிவிட்டர் குறித்து என்ன அட்வைஸ் செய்துள்ளார் தெரியுமா..? எலான் மஸ்க்-ன் திடீர் மன மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா..?
எலான் மஸ்க்
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை என அறிவித்ததைத் தொடர்ந்து டிவிட்டர் வழக்கு தொடுத்த நிலையில் எலான் மஸ்க் தனது பக்கம் இருக்கும் தரவுகள் சரி வர நிரூபணம் செய்ய முடியாத நிலையிலும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்தும் அதிகப்படியான அழுத்தும் வரும் காரணத்தாலும், வழக்கில் தோல்வி அடைந்தால் 1 பில்லியன் டாலர் தொகையை டிவிட்டர் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய கட்டுப்பாடும் எலான் மஸ்க்-கிற்கு இருக்கும் காரணத்தால் பல மாத வழக்கு, ஆலோசனைகளுக்குப் பின்பு டிவிட்டர் நிறுவனத்தை வாங்குதற்கு எலான் மஸ்க் ஒப்புதல் அளித்துள்ளார்.
டிவிட்டர் தொடுத்த வழக்கு
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்-கிற்கு எதிராக டிவிட்டர் தொடுத்த வழக்கு விசாரணையின் போல், மஸ்க் தரப்பில் பல தலைவர்கள், பிரபலங்கள், தனது முன்னாள் மனைவி உள்ளிட்ட பலரோடு டிவிட்டர் குறித்துப் பேசிய ஆவணங்களைத் தான் டிவிட்டர் கைப்பற்றுவதில் ஆர்வமாக இருப்பதைக் காட்ட முன்வைக்கப்பட்டது.
Talulah Riley வேண்டுகோள்
இதில் எலான் மஸ்க்-ன் முன்னாள் மனைவி Talulah Riley மஸ்க்-யிடம் முடிந்தால் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி, மொத்தமாக டெலிட் செய்துவிடு.. wokeism பிரச்சனை தலைவிரித்தாடுகிறது என மெசேஜ் செய்துள்ளார்.
டிவிட்டர் டெலிட்
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதாக ஏப்ரல் மாதம் அறிவித்தார், ஆனால் மார்ச் 23 ஆம் தேதி Talulah Riley தனது முன்னாள் கணவரான எலான் மஸ்க்-கிற்கு உன்னால் ட்விட்டரை வாங்கி, மொத்தமாக டெலிட் செய்ய முடியுமா? மொத்த அமெரிக்காவிற்கும் பைத்தியம் பிடித்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்
இல்லையெனில் டிவிட்டரை வாங்கி அனைவரும் சுதந்திரமாகப் பேச்சு உரிமை கொண்ட தளமாக மாற்றிவிடு.. டிவிட்டரில் அதிகப்படியான முட்டாள்தனம் வெளி வருகிறது என Talulah Riley கூறியுள்ளார். இதற்கு எலான் மஸ்க் டெலிட் செய்வது தவறு, வேண்டுமெனில் டிவிட்டரை வாங்கி அதைச் சுதந்திர பேச்சுக்குக்கான தளமாக மாற்றலாம் எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications