அமெரிக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்க்கும்போது 35,940 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவர் எலான் மஸ்க்.
டெஸ்லா என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம், விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நியூராலிங்க், தி போரிங் கம்பெனி என பல்வேறு நிறுவனத்தின் தலைவராகவு எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். தற்போது அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பதவி ஏற்றுள்ளது. இதில் டொனால்ட் டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவராக எலான் மஸ்க்.

எலான் மஸ்க் அண்மையில் தன்னுடைய 14ஆவது குழந்தையை வரவேற்றார். எலான் மஸ்கிற்கு மூன்று மனைவிகளும் 14 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் 4 குழந்தைகள் பஞ்சாப் பூர்வீகத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். எலான் மஸ்க் தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஷிவான் ஜில்லீஸுடன் வாழ்ந்து வருகிறார். இவர் எலான் மஸ்கின் மூன்றாவது மனைவி.
எலான் மஸ்கிற்கு ஷிவான் ஜில்லீஸுக்கும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். முதலில் இரட்டையர்கள் , பின்னர் ஒரு மகள் , அண்மையில் ஒரு மகன் என நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அண்மையில் இவர்கள் தங்களுடைய நான்காவது குழந்தையை பெற்றெடுத்த செய்தியை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டனர்.
ஷிவான் ஜில்லீஸை பொறுத்தவரை கனடா நாட்டில் பிறந்தவர். இவரது தாயார் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். ஷிவான் ஜில்லீஸின் தாயார் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் பெயர் சாரதா என சொல்லப்படுகிறது. இவர் கனடாவில் செட்டிலாகி கன்னட நாட்டவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் மகள் தான் ஷிவான் ஜில்லீஸ்.
ஷிவான் ஜில்லீஸ் 2015 ஆம் ஆண்டு பீப்பிள் நாளிதழுக்கு பேட்டி அளித்த போது என்னுடைய தாயார் பஞ்சாபி அவரிடமிருந்து தான் எனக்கு இந்த பெரிய கண்கள் வந்தன என கூறியுள்ளார். எலான் மஸ்கிற்கும் இவருக்கும் பிறந்திருக்கும் நான்காவது குழந்தைக்கு செல்டன் லைக்கர்கஸ் என பெயர் சூட்டியுள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொருளாதார பிரிவில் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தவர் தான் ஷிவான் ஜில்லீஸ். தொழில்நுட்ப துறையில் மிகவும் திறமை வாய்ந்தவராக இவர் அறியப்படுகிறார், இவர் ஐபிஎம் , ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார்.
பின்னர் எலான் மஸ்குடன் இணைந்து நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கி தற்போது அதன் தலைவராக இயங்கி வருகிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு அஸ்யூர் மற்றும் சைடர் என்ற இரட்டையர்களும் 2024 ஆம் ஆண்டில் அர்காடியா என்ற மகளும் பிறந்தனர்.


Click it and Unblock the Notifications