எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்திற்கு கடும் சிக்கல்..!! முக்கிய புள்ளி திடீர் விலகல்..!! என்ன காரணம்?

எலான் மஸ்க் தொடங்கியுள்ள செயற்கை நுண்ணறிவு நிறுவனம் xAI-இல் முக்கிய பொறியியல் தலைவராக இருந்த உதய் ருத்ர ராஜு, தனது பதவியில் இருந்து விலகி, முன்னணி போட்டியாக இருக்கும் OpenAI நிறுவனத்தில் இணைந்துள்ளார். xAI நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்ப கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த உதய், தற்போது தனது மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு, செயற்கை நுண்ணறிவு துறையில் இடம்பெறும் முக்கிய மாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ள ருத்ர ராஜு, சமீபத்தில் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டிருந்தார். அதில், NVIDIA நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜென்சன் ஹுவாங் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, "ஜென்சன் ஹுவாங் சொன்னது உண்மைதான். எலான் மஸ்க்கும், அவரின் குழுவும் எட்ட முடியாத உயரங்களை எட்டும் திறன் கொண்டவர்கள். AI கணிப்பொறி (AI Compute) என்ற துறையில் உள்ளிருந்து, எதிர்காலத்தை வடிவமைக்க சிறிய பங்கு வகித்ததற்கு நன்றி" என்று பதிவிட்டிருந்தார்.

எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்திற்கு கடும் சிக்கல்..!! முக்கிய புள்ளி திடீர் விலகல்..!! என்ன காரணம்?

எலான் மஸ்க் கனவுகளுக்கே இதயம் போல இருந்த Colossus என்ற சூப்பர் கணிப்பொறியை உருவாக்கும் பணியில் ருத்ர ராஜு தான் மையக் கதாபாத்திரமாக இருந்தார். Colossus என்பது எலான் மஸ்க் உருவாக்க முயற்சிக்கும் நவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு அடித்தளமாக விளங்கும் கணிப்பொறி கட்டமைப்பு ஆகும். இந்த திட்டத்தில் உள்ளிருந்து முக்கிய பங்களிப்பு கொடுத்த ருத்ர ராஜுவின் விலகல், xAI-க்கு எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தொழில்நுட்ப வட்டாரங்கள் கருதுகின்றன.

எலான் மஸ்க் தலைமையிலான xAI நிறுவனத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாக Colossus சூப்பர் கணிப்பொறி கருதப்படுகிறது. மிகப்பெரிய கணிப்பொறி சுமைகளை சமாளிக்கக் கூடிய இந்த அமைப்பு, 2,00,000-க்கும் மேற்பட்ட GPU-க்களை கொண்டதாகும். xAI உருவாக்கிய Grok 3 எனும் புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு மாடலைப் பயிற்சி செய்ய இதில் முக்கிய பங்கு இருந்தது. இந்த Colossus திட்டத்தில் மையக் குழுவில் இருந்த ருத்ர ராஜு, xAIயில் தனது பயணத்தை "மறக்க முடியாத அனுபவம்" என கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், "நான் xAIயில் முதலில் சேர்ந்தபோது, 'இவர்கள் அனைவரும் பைத்தியம் என்று தான் நினைத்தேன். ஏனென்றால், முழுமையாக தயார் செய்யாத கணினி மையம் இருக்கும்போது, 4 மாதத்தில் 1 லட்சம் GPU-க்களை இயக்க முடியும் என்று யாராவது நம்புவது பெரிய விஷயம்தான். ஆனால், நாம் அதை இரட்டிப்பாக்கி, அதுவும் வெற்றிகரமாக Grok 3-ஐ பயிற்சி செய்து முடித்தோம். இதை நினைத்து நான் பெருமைபட்டேன். என் எண்ணம் தவறானது என்பதை உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், "எலான் மஸ்க் மற்றும் xAIயில் உள்ள அனைவருக்கும் நன்றி. Colossus போன்ற அடிப்படையான திட்டத்தை உருவாக்குவதில் பங்கு பெறுவதற்கு எனக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. இதுவே ஒரு பெரிய பணி என்பதையும், அதில் இருந்து என்னுடைய உள்ளூரான அனுபவத்தைப் பார்த்ததும் பெருமை அளித்தது. எலான் மஸ்க்கிடம் நேரடியாக கற்றுக்கொண்டது சிறந்த அனுபவமாக இருந்தது.

இந்நிலையில், xAI விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ருத்ர ராஜு OpenAI-க்கு செல்லும் எண்ணத்தை அறிவித்தார். இது செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிய மாற்றங்களையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவல்கள் படி, Meta நிறுவனம் தொழில்துறையில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்களை, கோடிக்கணக்கான டாலர் சம்பளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தன் பக்கம் ஈர்க்க முயன்றுள்ளது. குறிப்பாக, OpenAI நிறுவனத்தில் இருந்து பல திறமையான விஞ்ஞானிகள், உயர் சம்பள ஒப்பந்தங்களை வழங்கி Meta பணியில் சேர்ந்துள்ளனர்.

அதன்படி, OpenAI நிறுவனத்தில் இருந்த முக்கிய AI நிபுணர்கள் ட்ராபிட் பான்சால், லூக்காஸ், சியாவூ ஹாய் மற்றும் யுவான் ஜி லி போன்றவர்கள், Meta நிறுவனத்தில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர். மார்க் ஜூக்கர்பெர்குக்கு மிக உயர்ந்த சம்பளம் கொடுத்து, சிறந்த திறமைகள் கொண்டவர்களை Meta-வில் சேர வைப்பதில் முயற்சி செய்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+