எலான் மஸ்க் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் எப்படி டெஸ்லா கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பது எனக் குழம்பியிருக்கும் வேளையில், டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
பல வாரங்களாக நடந்து வரும் வழக்கு எலான் மஸ்க்-ன் முடிவால் முடிவுக்கு வந்தாலும், டிவிட்டர் நிறுவனத்திற்கு அதிகப்படியான விலை கொடுக்கப்படுகிறதோ என்ற எண்ணம் எலான் மஸ்க் மற்றும் பிற முதலீட்டாளர்களுக்கும் நினைப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் எலான் மஸ்க் மாதம் 166 கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டு வருகிறார் தெரியுமா..?
எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வாயிலாக அளிக்கப்படும் பிராண்ட்பேன்ட் சேவையான ஸ்டார்லிங்க்-ஐ ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்குப் பல மாதங்களாக எவ்விதமான தொகையும் பெறாமல் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
166 கோடி ரூபாய்
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 20 மில்லியன் டாலர் அதாவது 166 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை இழந்து வருகிறோம். இந்த ஸ்டார்லிங்க் தேவை மூலம் உக்ரைன் - ரஷ்யா மத்தியில் மிகப்பெரிய சைபர் போர்-ஐ தடுக்கும் வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது என எலான் மஸ்க் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு
உக்ரைன் நாட்டில் அளிக்கப்பட்டு வரும் ஸ்டார்லிங்க சேவைக்காக இதுவரை அமெரிக்காவின் Department of Defense எவ்விதமான பணத்தையும் அளிக்கவில்லை, ஆனால் பல்வேறு நாடுகள், அமைப்பு, தனிநபர்கள் ஒரு டெர்மினலுக்கு 11000 முதல் 25000 டாலர் வரையில் அளித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் எலான் மக்ஸ்.
பென்டகன் அறிவிப்பு
இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பென்டகன் உக்ரைன் நாட்டில் அளிக்கப்பட்டு வரும் ஸ்டார்லிங்க் சேவைக்குப் பென்டகன் உரிய பணத்தை அளிக்கத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்த நிலையில், நேற்று எலான் அரசு தரப்பில் இருந்து எவ்விதமான தொகையும் வரவில்லை என்பதைத் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் சேவை
இதே ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அளிக்க வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் முயற்சி செய்து முதல் முறை தோல்வியுற்ற நிலையில், 2வது முறை மத்திய டெலிகாம் அமைச்சகத்திடம் உரிமம் பெற விண்ணப்பம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications