டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் தலைவரான எலான் மஸ்க் தனது டிவிட்டரில் உலகிலேயே அதிகமானோரால் பார்க்கப்பட்ட பேபி ஷார்க் பாடலை பேபி டோஜ் என்று மாற்றித் தனது டிவிட்டரில் பதிவிட்டார்.
இந்தப் பதிவிற்கு முன்பு ரிலீஸ் தி டோஜ் என்ற பதிவையும் செய்தார். இந்த இரண்டு பதிவுகளும் கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையில்லை.
எலான் மஸ்க்-ன் இந்த இரண்டு டிவீட்-க்குப் பின் கிரிப்டோகரன்தி சந்தையில் டோஜ்காயின் மதிப்பு சுமார் 7 சதவீதம் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் ஒரு டோஜ் காயின் விலை 0.2606 புள்ளிகளாக உயர்ந்தது.

இதேவேளையில் பிட்காயின், எதிரியம், ரிப்பிள், கார்டானோ போன்ற அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சிகளும் சரிவடைந்துள்ளது.
முன்னணி கிரிப்டோகரன்சிகள் சரிவடைந்த நிலையில் டோஜ்காயின் மட்டும் வளர்ச்சி அடைந்து வருவது இதன் முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் டோஜ்காயின் வளர்ச்சி மூலம் இதன் மொத்த சந்தை மதிப்பு 31.34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டோஜ்காயின் 3 சதவீதம் சரிந்தது மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியும் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications