அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எலான் மஸ்க் தன்னுடைய தொழில் நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளார். குறிப்பாக தன்னுடைய ஸ்டார் ஷிப் திட்ட செயல்பாடுகளை அவர் வேகப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் ஆட்சி காலத்திலேயே இதற்கு அனுமதி கிடைத்து விட்டால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு 30 நிமிடங்களிலேயே பயணம் செய்து விட முடியும் என சொல்லப்படுகிறது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார் ஷிப் என்ற ஒரு திட்டத்தை சோதனை செய்து வருகிறது. உலகின் பிரதான நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இதற்காக இந்த நிறுவனம் ஸ்டார் ஷிப் என்ற ஒரு பெரிய ஸ்பேஸ் கிராஃப்டை வடிவமைத்துள்ளது. முழுக்க முழுக்க ஸ்டெயின் லெஸ் ஸ்டீலில் இருந்து 395 அடி உயரத்தில் இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற உடன் எலான் மஸ்க் தன் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இந்த திட்டத்திற்கு அனுமதி பெற்று விடுவார் என சொல்லப்படுகிறது.

இவ்வாறு அனுமதி பெற்றுவிட்டால் எலான் மஸ்க்குக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. பொதுவாக ஸ்பேஸ் கிராஃப்ட்டுகள் என்றால் அது பூமியிலிருந்து கிளம்பி விண்வெளிக்கு செல்லும். ஆனால் எலான் மஸ்க் நிறுவனம் தயாரிக்க கூடிய இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் பூமியிலேயே ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லும் வகையில் இதன் தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அவ்வாறு நடந்துவிட்டால் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து டொரண்டோ வரையிலான பயணம் 24 நிமிடங்களாக குறைந்துவிடும். லண்டன் முதல் நியூயார்க் வரையிலான பயண நேரம் 29 நிமிடங்களாகவும், டெல்லி முதல் சான் பிரான்சிஸ்கோ இடையிலான பயணம் 30 நிமிடங்களாகவும், நியூயார்க் முதல் ஷாங்காய் வரையிலான பயண நேரம் 39 நிமிடங்களாகவும் குறைந்து விடுமாம்.
இருந்தாலும் இந்த ஸ்பேஸ் கிராஃப்டில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் அது மேலெழும்பும் போதும் தரை இறங்கும்போதும் புவி ஈர்ப்பு விசை காரணமாக சில பிரச்சனைகளை சந்திக்கலாம் என சொல்லப்படுகிறது. அதற்கான சோதனைகளை தான் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பயனர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இனி ஸ்டார் ஷிப் மூலம் நாம் பூமியின் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் சென்றடைந்து விடலாம் என பதிவு செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் இனி இது சாத்தியம் என தெரிவித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications