உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ் கீழ் இயங்கி வரும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் வாயிலாக இயங்கும் பிராட்பேன்ட் சேவையான ஸ்டார்லிங்க்-ஐ மக்களுக்கு விரைவில் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவில் தனது SpaceX-ன் கிளை நிறுவனத்தை துவங்க முடிவு செய்துள்ளது.
இதேபோல் தான் இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக டெஸ்லா கிளை நிறுவனம் இந்தியாவில் துவங்கப்பட்டது. தற்போது SpaceX-ன் கிளை நிறுவனமும் இந்தியாவில் துவங்கப்படுகிறது.
எலான் மஸ்க்
இந்தியாவில் பிராட்பேன்ட் சேவையில் மாபெரும் புரட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கைக்கோள் உடனான நேரடியான இணைப்பில் இயங்கும் ஸ்டார்லிங்க் பிராட்பேன்ட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறது.
ஸ்டார்லிங்க் பிராட்பேன்ட்
இதற்கான முதற்கட்ட ஒப்புதலை மத்திய டெலிகாம் துறை அளித்துள்ள நிலையில் இந்தியாவில் டிசம்பர் 2022க்குள் 2 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஸ்டார்லிங்க் பிராட்பேன்ட் சேவையை அறிமுகம் செய்ய ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதற்கு இறுதி ஒப்புதல் பெற வேண்டும்.
ஸ்பைஸ்எக்ஸ்
இந்த இலக்கை உரிய நேரத்தில் அடைய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் Starlink Satellite Communications Private Limited என்ற நிறுவனத்தை நவம்பர் 1ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் துவங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் ஸ்பேஸ்எக்ஸ் நேரடியாக வைத்துள்ளது.
சஞ்சய் பார்கவா
தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக Starlink Satellite Communications Private Limited நிறுவனம் துவங்கப்பட்டு உள்ள நிலையில் டெலிகாம் சேவை அளிப்பதற்கான உரிமங்களைப் பெற விண்ணப்பம் செய்ய முடியும், வங்கி கணக்குகளைத் துவங்க முடியும் என இந்திய ஸ்டார்லிங்க் சேவை தலைவர் சஞ்சய் பார்கவா தெரிவித்துள்ளார்.
5,000 பேர் ப்ரீ புக்கிங்
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை துவங்குவதற்கு முன்பாகவே சுமார் 5,000 பேர் ப்ரீ புக்கிங் செய்துள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 99 டாலர் செக்யூரிட்டி டெபாசிட் மூலம் ஸ்டார்லிங்க் சேலை அளிக்கப்படுகிறது.
டெலிகாம் மற்றும் பிராண்ட்பேன்ட் நிறுவனங்கள்
இந்தச் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் நாட்டின் முன்னணி டெலிகாம் மற்றும் பிராட்பேன்ட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது இருக்கும் பிராட்பேன்ட் சேவையில் நிலையற்ற தன்மை அதிகமாக இருக்கும் வேளையில் ஸ்டார்லிங்க் சேவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications