இன்றைய டெக் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஹைப்பர்லூப், நியூராலிங்க், போரிங் கம்பெனி எனப் பல துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், வெற்றியை அடைந்து வரும் நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் மிகப்பெரிய வர்த்தகத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா-விடம் இருந்து பெற்றுள்ளது.
விண்வெளி பயணத்தில் தொடர்ந்து சாதனைகளைப் படித்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்காவின் முதல் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக உள்ளது. இத்துறையில் பல தனியார் நிறுவனங்கள் வந்தாலும் ஸ்பேஸ்எக்ஸ் அடைந்த சாதனைகளை வேறு எந்த நிறுவனமும் அடைந்தது இல்லை.
ஸ்பேஸ்எக்ஸ் மாஸ்
நிலவு குறித்த ஆராய்ச்சி மற்றும் பயணங்களை உலக நாடுகள் சில காலம் ஒத்திவைத்திருந்த நிலையில் நாசா தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் துவங்கியுள்ளது. நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ்எக்ஸ் ஏற்கனவே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஒரு பயணத்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
நிலாவுக்கு 2024 பயணம்
இந்நிலையில் நாசா நிலாவுக்கு 2024ஆம் ஆண்டுக்குள் செல்ல ஒரு ஸ்பேஸ்கிராப்ட்-ஐ தயாரிக்கும் 2.9 பில்லியன் டாலர் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் மட்டும் அல்லாமல் அமேசான் ஜெப் பைசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் மற்றும் டிபென்ஸ் கார்டிராக்டரான டைனெட்டிக்ஸ் இன்க் ஆகிய நிறுவனங்களும் போட்டிப்போட்டது.
நாசாவின் முடிவு
ஆனால் நாசா பல காரணிகளை ஆய்வு செய்த பின் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளது நாசா. இதில் குறிப்பாக அமேசான் ஜெப் பைசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தனி நிறுவனமாக அல்லாமல் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப், நார்த்ரோப் குர்ம்மேன், டிராபர் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து இயங்குகிறது. ஆனாலும் நாசா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தைத் தான் தேர்வு செய்துள்ளது.
எலான் எஸ்க் அசத்தல் டிவீட்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நாசாவின் 2.9 பில்லியன் டாலர் திட்டத்தைக் கைப்பற்றிய நிலையில் எலான் மஸ்க் வழக்கம்போல் தனது சேட்டையைக் காட்டியுள்ளார். முதல் டிவீட் நாசா ரூல்ஸ் எனவும் அடுத்த டிவீட் இனி எல்லாம் நிலவுக்கு எனவும் டிவீட் செய்து அசத்தியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications