இந்தியாவில் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்யும் முன்னரே இந்திய மக்களிடம் இச்சேவைக்கான முன்பணத்தைப் பெற துவங்கியது.
இதைக் கடுமையாக மத்திய டெலிகாம் துறை எதிர்த்த நிலையில், ஸ்டார்லிங்க் இந்தியா ப்ரீ ஆர்டர் சேவையை முழுமையாக நிறுத்தியது. இந்தியாவில் துவங்கப்பட்ட ஸ்டார்லிங்க் சேவைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
ஸ்டார்லிங்க் இந்தியா
இந்திய அரசு எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் இந்தியா நிறுவனத்தை மக்களிடம் பெற்ற பணத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அளிப்பதற்கான உரிமத்தை இன்னும் பெற முடியாத நிலையில் இந்திய அரசின் உத்தரவை உடனடியாக நிறைவேற்றியாக வேண்டிய சூழ்நிலை உருவானது.
ப்ரீ ஆர்டர் ரீபண்ட்
இதனால் ஸ்டார்லிங்க் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ ஆர்டருக்கு பெற்ற 99 டாலர் மதிப்பிலான இந்திய ரூபாயைத் திரும்பச் செலுத்தி வருகிறது. இதுவரை ஸ்டார்லிங்க் இந்தியா சுமார் 5000 பேரிடம் ப்ரீ ஆர்டர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ்எக்ஸ்
இந்நிலையில் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வழங்குவது போலவே இந்தியாவிலும் செயற்கைக்கோள் வாயிலாக அளிக்கப்படும் பிராண்ட்பேன்ட் சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டார்லிங்க் இந்தியா என்ற கிளை நிறுவனத்தை உருவாக்கியது.
5000 பேரிடம் ப்ரீ ஆர்டர்
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் நிறுவனங்களில் முதல் முதலாகத் துவங்கப்பட்ட இந்திய கிளை நிறுவனம் இது. தற்போது ஸ்டார்லிங்க் இந்தியா 5000 பேரிடம் ப்ரீ ஆர்டர் பெற்றதற்கான தொகையை ரீபண்ட் செய்யத் துவங்கிய நிலையில் ஸ்டார்லிங்க் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்ட சஞ்சய் பார்கவா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
சஞ்சய் பார்கவா
இதுகுறித்து சஞ்சய் பார்கவா தனது லிங்கிடுஇன் தளத்தில் ஸ்டார்லிங்க் இந்தியா நிறுவனத்தின் டைரெக்டர் மற்றும் நிர்வாகக் குழுவின் சேர்மன் பதவியில் இருந்து என்னுடைய சொந்த காரணத்திற்காக விலகிவிட்டேன். என்னுடைய கடைசி வேலைநாள் டிசம்பர் 31,202. தனிநபர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நான் எந்தக் கருத்தும் கூறமாட்டேன் எனவே எனது ப்ரைவசியை மதிக்கவும் எனத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications