இது என்னடா டெஸ்லாவுக்கு வந்த சோதனை! இந்திய நிறுவனத்தின் மீது வழக்கு – காரணம் என்ன?

டெல்லி: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. எலக்ட்ரிக் வாகன துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கிறது டெஸ்லா.

அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமெரிக்க டெஸ்லா நிறுவனம் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்..

இது என்னடா டெஸ்லாவுக்கு வந்த சோதனை! இந்திய நிறுவனத்தின் மீது வழக்கு – காரணம் என்ன?

டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் காலடி வைக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையிலும், அதற்காக துவங்கப்பட்ட முதற்கட்ட பணிகளை துவங்குவதாக கூறப்பட்டது, ஆனால் மொத்த திட்டத்தையும் கைவிடுவதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், உத்தர பிரதேச மாநிலம் கூர்கான் பகுதியை சேர்ந்த டெஸ்லா பவர் யுஎஸ்ஏ (Tesla Power USA) என்ற நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் டெஸ்லா பவர் நிறுவனம் தங்களது டிரேட் மார்க்கை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

டெஸ்லா நிறுவனம் சர்வதேச அளவில் பெயர் பெற்ற நிறுவனம் என்றும் தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் ட்ரேட் மார்க்கை உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த டெஸ்லா பவர் யுஎஸ்ஏ நிறுவனம் பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

டெஸ்லா பவர் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக விளம்பரங்களை வெளியிட்டு வருவதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் என நம்பி ஏமாறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, டெஸ்லா பவர் நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெஸ்லா பவர் யுஎஸ்ஏ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் எண்ணத்தில் இல்லை ,எதிர்காலத்திலும் எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான எந்த ஒரு தொழிலிலும் இந்த நிறுவனம் ஈடுபடாது.

அதனால் அந்த பெயரிலேயே தொடர்ந்து நிறுவனம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.கடந்த 2020 முதல் தங்கள் நிறுவனம் பேட்டரி விற்பனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து, டெஸ்லா பவர் யுஎஸ்ஏ என்ற பெயரை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் டெஸ்லா நிறுவனத்திடமும் நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதற்கான ஆவணங்களை கேட்டிருக்கிறது.

இந்த இரு நிறுவனங்களும் ஆவணங்களை தாக்கல் செய்த பிறகு அடுத்த கட்ட வாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வழக்கு மே 22 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. டெஸ்லா பவர் நிறுவனம் மே 22 வரை எந்தவித விளம்பரங்களையும் குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான எந்த ஒரு விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது .

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+