எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு பிப்ரவரி மாதத்தில் 28 சதவீதம் சரிவடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. கூடிய விரைவில் இந்த நிறுவனம் இந்தியாவிலும் தங்களுடைய மின்சார கார்களை விற்பனை செய்ய இருக்கிறது. ஆனால் அண்மை காலமாகவே டெஸ்லா நிறுவன கார்களின் விற்பனை சரிவில் இருக்கிறது. இதற்கு சீனாவின் பிஒய்டி மின்சார வாகன நிறுவனம் முக்கிய காரணமாகும். டெஸ்லாவை விட பட்ஜெட் விலையில் இந்த நிறுவனம் மின்சார கார்களை விற்பனை செய்து டெஸ்லாவின் முக்கிய சந்தையான சீனா மற்றும் ஐரோப்பிய சந்தையை பிடித்து வருகிறது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 28% வரை சரிவடைந்திருக்கிறது .கடந்த டிசம்பர் மாதத்தில் 479 டாலர்களாக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு பிப்ரவரியில் 293 டாலர்கள் என சரிவை கண்டு இருக்கிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவிலேயே இருப்பது இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எஸ்&பி 500 இன்டெக்ஸ் 2 % வரை சரிவை கண்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதன் ஒரு பங்கு மதிப்பு 37 சதவீதம் சரிவடைந்தது. அதன் பிறகு ஒரு மிகப்பெரிய சரிவை கண்டு இருப்பது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான். ஐரோப்பிய சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை சரிவடைந்தது இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கான வாகன உற்பத்தி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 9,945 டெஸ்லா வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன , இது கடந்த ஆண்டு 18,161 ஆக இருந்துள்ளது.
அதே வேளையில் ஐரோப்பிய நாடுகளில் மின்சார வாகனங்கள் வாங்கும் போக்கு 37 சதவீதம் அதிகரித்துள்ளதாம். எனவே மக்கள் டெஸ்லாவுக்கு மாற்றாக மற்ற பிராண்டுகளின் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே டெஸ்லா நிறுவனத்திற்கு தற்போது ஐரோப்பிய சந்தையில் மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது.
எலான் மஸ்கி அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவராக மாறியிருக்கிறார். ஆனால் அது அவருடைய நிறுவன பங்குகளை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் உதவவில்லை. இந்த நெருக்கம் அவருடைய நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குறைத்து வருவதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் பட்ஜெட் விலையில் ஐரோப்பிய சந்தையில் மாடல் ஒய் என்ற பெயரில் புதிய மின்சார காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
Story Written:devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications