எலான் மஸ்க் ட்விட்டர் குழு இன்று பேச்சு வார்த்தை.. முடிவு எட்டப்படுமா?

ட்விட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் கைபற்றுவாரா? ட்விட்டர் ஊழியர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும். ஒரு வேளை எலான் மஸ்க் கைபற்றினால் ட்விட்டரின் செயல்பாடு எப்படியிருக்கும்? என்னென்ன மாற்றங்கள் வரும் என்ற பல கேள்விகள் வலம் வந்து கொண்டுள்ளன.

குறிப்பாக எலான் மஸ்க் வாங்கினால் ட்விட்டர் சிஈஒ ஆக இருக்கும் பராக் அகர்வால், பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற கருத்தும் இருந்து வருகின்றது.

இணையத்தில் உலவும் கருத்து

இணையத்தில் உலவும் கருத்து

மேலும் ட்விட்டருக்கான புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் முக்கிய பிரிவுகளை நிர்வாகம் செய்யும் தலைமை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 44 பில்லியன் டாலர் கையகப்படுத்தல் முழுமையாக முடிந்த பின்னர், பராக்-கிற்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற கருத்தும் இருந்து வருகின்றது.

முக்கிய அதிகாரிகள் பணி நீக்கமா?

முக்கிய அதிகாரிகள் பணி நீக்கமா?

இந்த நிலையில் செப்டம்பர் 26 - 27க்கு ட்விட்டர் வழக்கறிஞர்கள் 44 பில்லியன் கையகப்படுத்தலுக்கு பதவி நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது. மொத்தத்தில் கையகப்படுத்தலுக்கு முன்பு பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டம் செப்டம்பர் 28 வரை கூட நீடிக்கலாம் என தெரிகின்றது.

பராக் அகர்வால் நிலை?

பராக் அகர்வால் நிலை?

இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம் உள்பட பலவற்றை விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தலைமை செயல் அதிகரியான பராக் அகர்வாலின் பணி நீக்கம் குறித்தும் விவாதம் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ட்விட்டரை எலான் மஸ்க் வாங்க போகிறாரா? இல்லையா? என்பதே விவாதமாக மாறியுள்ள நிலையில் இது போன்ற யூகங்களும் வெளியாகி வருகின்றன. 

மாற்றங்கள் உறுதி

மாற்றங்கள் உறுதி

எனினும் கையகப்படுத்தலுக்கு முன்பு பல முக்கிய மாற்றங்களை செய்வதில் எலான் மஸ்க் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடக்கவுள்ள 3 மணி நேர கூட்டத்தில், ட்விட்டர், எலான் மஸ்க் தரப்பு விவாதிக்கவுள்ளதாகவும், குறிப்பாக போலி கணக்குகள் குறித்த தரவுகளை விவாதிக்கவுள்ளதாகவும், எலான் மஸ்க்-ன் வழக்கறிஞர்கள் குழு இதற்காக பலதரப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பீட்டர் ஜாட்கோ கருத்து

பீட்டர் ஜாட்கோ கருத்து

முன்னதாக ட்விட்டர் விசில்ப்ளோயர் பீட்டர் ஜாட்கோ, 2020 -ன் பிற்பகுதியில் இருந்து இந்த ஆண்டு ஜனவரியில் அவர் பணிநீக்கம் செய்யப்படும் வரை தளத்தின் பாதுகாப்புத் தலைவராக இருந்தார். அவர் ஹேக்கிங் அல்லது தரவுத் திருட்டுக்கான கடுமையான பாதிப்புகள் குறித்து நிர்வாகத்தை எச்சரிக்க முயற்சித்தேன், ஆனால் அதனால் பெரிதும் பயனில்லை. அவர்களால் அதைப் பாதுகாக்க முடியாது, என்று நீதித்துறைக் குழுவில் தனது கருத்தினை ஜாட்கோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்கு தாரர்கள் ஆதரவு

பங்கு தாரர்கள் ஆதரவு

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்த அதன் பங்குதாரர்கள் வாக்களித்தனர். பெரும்பாலான பங்குதாரர்கள் ஏற்கனவே இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கிடையில் தான் டிவிட்டர் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காக மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டது.

டெஸ்லா தலைமை நிர்வாகியும் எதிர் வழக்கு தொடர்ந்தார், ட்விட்டர் தனது சேவையில் தவறான மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையை தவறாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டினார்.

புரியாத புதிர்

புரியாத புதிர்

ஜாட்கோவின் விசில்ப்ளோவர் புகாரில், ஜாட்கோ மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இடையேயான மின்னஞ்சல்கள் மற்றும் ட்விட்டரில் தவறான தகவல் மற்றும் தவறான தகவல்களின் மதிப்பீடு போன்ற துணை ஆவணங்களுக்கான இணைப்புகள் இரண்டு பக்கங்களுக்கு மேல் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையில் இரு குழு இடையேயன பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்துவாரா? பராக் அகர்வாலின் நிலை என்ன? என்பது இன்று வரையில் புரியாத புதிராகவே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+