உலகமே எதிர்பார்க்கும் தொழில்நுட்ப மாற்றங்களை சத்தமில்லாமல் நிகழ்த்திக் காட்டுபவர் எலான் மஸ்க். விண்வெளிப் பயணம் முதல் மின்சார வாகனங்கள் வரை பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியவர், இப்போது உலகின் மிகப் பெரிய சமூக ஊடகத் தளங்களில் ஒன்றான X தளம் மூலம் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார்.
தற்போது உலகின் முன்னணி மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்புக்கு நேரடி போட்டியாக ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்தப் புதிய மெசேஜிங் சேவைக்கு 'XChat' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சேவையின் மிகப்பெரிய சிறப்பம்சம், பயனர்களின் பாதுகாப்பிற்கும், தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பதுதான்.

இதுதொடர்பாக எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த 'XChat' சேவை தற்போது ஐபோன் (iOS) மற்றும் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் இணையப் பதிப்புகளில் வெளிவரத் தொடங்கியுள்ளது. விரைவில், ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் இது அறிமுகமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. "உங்களுடைய பழைய டைரக்ட் மெசேஜ்களும் (DMs), புதிய Chat சேவையும் இப்போது எக்ஸ் செயலியின் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எனவே, XChat-ஐ பயன்படுத்த உங்கள் X செயலியை உடனே புதுப்பித்துக் கொள்ளுங்கள்" என்று நிறுவனம் கூறியுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் புதிய புரட்சி : இந்த XChat செயலியை எலான் மஸ்க் ஜூன் மாதத்திலேயே அறிவித்திருந்தார். பயனர்கள் தங்கள் தனிப்பட்ட செய்திகளை மிகவும் பாதுகாப்பாக பரிமாறிக் கொள்ளவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. XChat, மற்ற மெசேஜிங் செயலிகளைவிட பல படிகள் முன்னேறி, பிட்காயின் போன்ற மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. Rust எனப்படும் வேகமான மற்றும் பாதுகாப்பான கம்ப்யூட்டர் மொழியில்தான் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
முழுமையான ரகசியம் : நீங்கள் அனுப்பும் செய்தியை, அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும். வேறு யாராலும், ஏன் X தளம் நிறுவனத்தாலும் கூடப் பார்க்க முடியாது.
மறைந்து போகும் செய்திகள் : அனுப்பும் செய்திகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, தானாகவே மறைந்து போகும் வசதி இதில் உள்ளது. எவ்வளவு நேரத்தில் மறைய வேண்டும் என்பதை நீங்களே செட் செய்துகொள்ளலாம்.
எந்த கோப்பையும் அனுப்பலாம் : எந்த வகையான கோப்புகளையும் (Photos, Videos, Documents) இதன் மூலம் நீங்கள் எளிதாக அனுப்பலாம்.
ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் : யாருக்கும் ஃபோன் நம்பர் கொடுக்காமல், X தளத்தின் மூலமாகவே ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
பிரீமியம் பயனர்களுக்கு சிறப்புச் சலுகை : XChat இப்போது அனைவருக்கும் பயன்படுத்த கிடைத்தாலும், அதன் சில நவீன மற்றும் கூடுதல் வசதிகள் பிரீமியம் சந்தா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது, அதிக அளவில் சேமிப்பு வசதி, முன்னுரிமை உதவி மற்றும் புதிய அம்சங்களை முதலில் பயன்படுத்தும் வாய்ப்பு போன்ற சலுகைகள் கட்டணம் செலுத்தும் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று எலான் மஸ்க் சுட்டிக் காட்டியுள்ளார்.
சீனாவில் மிகவும் பிரபலமாக உள்ள WeChat போல, X தளத்தையும் அனைத்துச் செயல்பாடுகளையும் கொண்ட ஒரு மாபெரும் தளமாக மாற்ற வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் பெரிய இலக்கின் ஒரு பகுதியாகவே இந்த XChat சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications