ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், குழந்தைகளுக்கு பயன்படக் கூடிய "பேபி கிராக்" என்ற புதிய ஏஐ செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், "நாங்கள் xAI மூலம் 'பேபி கிராக்' எனும் செயலியை உருவாக்க உள்ளோம். இது குழந்தைகள் பயன்படுத்தும் வகையில், பாதுகாப்பானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
xAI நிறுவனம் ஏற்கனவே Grok எனும் ஏ.ஐ. சாட்பாட்டை அறிமுகம் செய்தது. தற்போது இதன் சிறப்பு பதிப்பாக பேபி கிராக் (Baby Grok) செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பொதுவாக, Grok என்பது பெரியவர்கள் கேள்விகள் கேட்கவும், தகவல்களை அறியவும் பயன்படும் சாட்பாட் ஆகும். ஆனால், தற்போது குழந்தைகளுக்கு என்று தனியாக Baby Grok எனும் சாட்பாட் வடிவமைக்கப்பட உள்ளது.

இதில், குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப எளிமையான பதில்கள் கிடைக்கும். கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம். தவறான அல்லது அபாயகரமான தகவல்களைத் தடுக்கும் பாதுகாப்பு முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அறிவை வளர்க்கும் கதைகள், விஞ்ஞானம், கணிதம் போன்ற பகுதிகள் இதில் இடம்பெற்றிருக்கும்.
Baby Grok செயலியின் முக்கிய நோக்கம் :
இப்போது பள்ளிச் செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், அவர்கள் செல்போனைத் தான் முதலில் கேட்கின்றனர். அதை வாங்கிப் பயன்படுத்தும்போது, இணையத்தில் பல்வேறு தகவல்களை தேடிப் பார்க்கின்றனர். ஆனால் அவை அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்காது. எனவே, இதற்கு தீர்வு காண்பதற்காகவே குழந்தைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான, நம்பகமான தகவல்களை வழங்கும் வகையில் Baby Grok செயலியை உருவாக்கப்பட உள்ளது.
முன்னதாக, xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட், கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தது. சில நேரங்களில் தவறான தகவல்களை வழங்கியது. சில சமயம், பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்ற அடல்ட் வகையான பதில்களை வழங்கியுள்ளது. ஒரு பதிலில், ஹிட்லரை ஒரு சிறந்த நபர் என Grok செயலி புகழ்ந்துள்ளது. மேலும், டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளை குறிப்பிடும் போது தவறான தகவல்களையும், பாரபட்சமான கருத்துகளையும் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சூழ்நிலையில், குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்த எலான் மஸ்க் முன்வந்துள்ளார்.
இதற்கிடையே, இம்மாதம் xAI நிறுவனம் Grok 4 எனும் புதிய மற்றும் மேம்பட்ட ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. இந்த Grok 4, முனைவர் பட்டம் (PhD) அளவுக்கேற்ப அறிவு கொண்டதாகும். இது 2026ஆம் ஆண்டுக்குள் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் திறனை கூட பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. xAI நிறுவனம் தனது கிராக் சாட்பாட்டை OpenAI ChatGPT, Google Gemini போன்றவற்றுடன் போட்டி கொள்ளும் வகையில் வளர்த்து வருகிறது.
நிபுணர்கள் எச்சரிக்கை : குழந்தைகள் ஏஐ சாட்பாட்-களிடம் பேசும்போது, தவறான தகவல்கள், பாலியல் எண்ணங்கள், ஏமாற்றும் உரையாடல்கள் மூலம் மனநிலை பாதிப்பு, தனிமை, தவறான உறவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, AI சாட்பாட்டையும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications