30 நிமிடத்தில் மொத்த அமெரிக்காவும் காலி.. ரஷ்யா பவர்புல்.. எலான் மஸ்க் டிவீட்..!

நேட்டோ வெள்ளிக்கிழமை தனது வருடாந்திர அணுசக்தி பயிற்சியை "ஸ்டெட்ஃபாஸ்ட் நூன்" தொடங்கும் என்று கூறியது.

ஐரோப்பாவைத் தளமாகக் கொண்ட அமெரிக்க அணுக்குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பெல்ஜியம், வட கடல் மற்றும் பிரிட்டன் மீது பயிற்சி விமானங்களில் 60 விமானங்கள் பங்கேற்கின்றன. அணு ஆயுதப் பயிற்சிகளில் உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தப்படப் போவது இல்லை.

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா கடந்த சில நாட்களில் பின்னடைவைச் சந்தித்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் மீண்டும் அணு ஆயுதத் தாக்குதல்களை அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, அணுசக்தி பயிற்சி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான் எலான் மஸ்க் முக்கியமான டிவீட் செய்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா

உக்ரைன் - ரஷ்யா

உக்ரைன் - ரஷ்யா மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில், உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர விண்ணப்பம் கொடுத்துள்ள வேளையில் ரஷ்யா இதுவரை இல்லாத கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதோடு அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தலையும் அறிவித்து வருகிறது.

  நேட்டோ வருடாந்திர அணுசக்தி பயிற்சி

நேட்டோ வருடாந்திர அணுசக்தி பயிற்சி

இந்த நிலையில் நேட்டோ தனது வருடாந்திர அணுசக்தி பயிற்சியைத் துவங்கியதை அடுத்த டிவிட்டரில் அலெக்ஸ் என்பவர், இப்படி தான் நாம் அணு ஆயுத போரை துவங்குகிறோம். அமெரிக்கா பயிற்சியைத் துவங்கிய நிலையில் தற்போது ரஷ்யா தனது அணுஆயுத பயிற்சிகளைத் துவங்கும்.

 அலெக்ஸ் டீவிட்

அலெக்ஸ் டீவிட்

அப்படி துவங்கினால் அனைத்து NATO நாடுகளும் அதன் LERTCON level அதாவது எச்சரிக்கை நிலையை அதிகரித்தும், இதை ரஷ்யாவும் செய்யும், இப்படி அடுத்தடுத்து அணு ஆயுத போர் வரையில் கொண்டு செல்லும் என அலெக்ஸ் டீவிட் செய்திருந்தார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதற்கு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அலெக்ஸ் டிவிட்டுக்கு ஆனால் நிச்சயமாக எந்த ஒரு நியாயமான மனிதனும் அணு ஆயுதப் போரைத் தொடங்க மாட்டான்?

அதற்கு நியாயமான மனிதனுடன் பழகினால் கட்டாயம் போர் என்பது இருக்காது.

வெறும் 30 நிமிடம்

வெறும் 30 நிமிடம்

மேலும் ரஷ்யா-வால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை வெறும் 30 நிமிடத்தில் தனது அணு ஆயுத ஏவுகணைகளை வைத்து மொத்தமாக அழித்துவிட முடியும். இதேபோல் தான் அமெரிக்காவும் ரஷ்யா-வை அழித்து விட முடியும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் இது முட்டாள்தனமான செயல் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+