உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா பங்குகள் 2022 ஆம் ஆண்டில் டிசம்பர் 15 ஆம் தேதி வரையில் மட்டும் 60.64 சதவீதம் சரிந்துள்ளது.
இதன் மூலம் டெஸ்லா இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான எலான் மஸ்க் சொத்து மதிப்பு 174 பில்லியன் டாலர் வரையில் சரிந்து 200 பில்லியன் டாலர் பட்டியலில் இருந்து வெளியேறியது மட்டும் அல்லாமல் உலகின் பெரும் பணக்காரர் என்ற பெயரையும் இழந்துள்ளார்.
இந்த நிலையில் மோசமான நிலைக்கு டெஸ்லா கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்பட்ட தொய்வு ஒரு காரணமாக இருந்தாலும், இந்த மோசமான நிலைக்கு எலான் மஸ்க் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக உள்ளது.
மேலும் எலான் மஸ்க் செய்வதைப் பார்த்தால் டெஸ்லா-வை மொத்தமாகக் கைகழுவ திட்டமிட்டு உள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது.
எலான் மஸ்க்
அரசனை நம்பி புருசனை கைவிட்ட பழமொழி எல்லோருக்கும் தெரியும், ஆனால் இங்கு வெறும் சிப்பாய்-ஐ நம்பி எலான் மஸ்க் தனது மொத்த சாம்ராஜ்ஜியத்தை இழக்க போகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டெஸ்லா பங்கு விற்பனை
டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 3.58 பில்லியன் டாலர் மதிப்புள்ள 22 மில்லியன் பங்குகளை விற்றுள்ளதாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்த விற்பனை மூலம் கடந்த ஒரு ஆண்டில் எலான் மஸ்க் விற்பனை செய்த மொத்த டெஸ்லா பங்குகள் மதிப்பு கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர்.
மோசமான சரிவு
உலகின் மிக மதிப்புமிக்கக் கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டெஸ்லா பங்குகள், இந்த ஆண்டு முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்தியில் மோசமான சரிவை பதிவு செய்த பங்குகளில் ஒன்றாகும். இவை அனைத்தும் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதால் வந்த வினை.
டிவிட்டர்
கடந்த ஆண்டு இறுதியில் எலான் மஸ்க் வருமான வரி செலுத்துவதற்காக அதிகப்படியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து பெரும் தொகையைச் சேர்த்த நிலையில் 2022 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்தார்.
விற்பனை, கடன்
இதற்காகப் பணத்தைச் சேர்க்க எலான் மஸ்க் டெஸ்லா பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தும், டெஸ்லா பங்குகளை அடமானம் வைத்து அதிகக் கடன் பெற்றும் டிவிட்டரில் முதலீடு செய்தார். இந்த நிலையில் டிவிட்டரும் எலான் மஸ்க் நினைத்த படி அதிக வருமானத்தை இதுவரையில் அளிக்கவில்லை.
முதலீட்டாளர்கள்
இந்தக் குளறுபடிக்குள் எலான் மஸ்க் டெஸ்லா மீதான கவனம் சிதறியுள்ளதாக முதலீட்டாளர்கள் கூறி அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்தனர் இதன் எதிரொலி தான் 60 சதவீத சரிவு.
3.58 பில்லியன் டாலர்
இப்போ சொல்லுங்க சப்பாய் போல இருக்கும் டிவிட்டருக்காக டெஸ்லா பங்குகளைத் தொடர்ந்து விற்கலாமா..? உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க. எலான் மஸ்க் இந்த 3.58 பில்லியன் டாலர் மதிப்புள்ள 22 மில்லியன் பங்குகளை விற்று டிவிட்டரிலும், வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவும் தான் செலவு செய்திருப்பார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications