அமெரிக்க அதிபராக வரும் 20ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவில் இரண்டு பயங்கரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று லாஸ் வேகாஸில் செயல்பட்டு வருகிறது. டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த ஹோட்டலின் நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு சொந்தமான சைபர் டிரக் என்ற கார் தான் திடீரென தீப்பிடித்தது.

இந்த சம்பவத்தில் காரின் ஓட்டுனர் உயிரிழந்தார், ஏழு பேர் காயமடைந்தனர். டிரம்பின் ஹோட்டலுக்கு வெளியே நிகழ்ந்ததால் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் தாறுமாறாக ஓடிய கார் மக்கள் மோதியது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் வேண்டுமென்று கூட்டத்தினுள் நுழைந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. எனவே டிரம்ப் ஹோட்டலுக்கு வெளியே நடந்த கார் வெடிப்பும் அதேபோன்ற ஒரு தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் சந்தேகம் எழுதப்பட்டது. இந்நிலையில் எலான் மஸ்கும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டிருந்தார்.
அதில், சைபர் டிரக் வெடித்ததற்கும் நியூ ஆர்லியன்ஸில் நடந்த பயங்கரவாத சம்பவத்தில் 15 பேர் பலியான சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்த இரண்டு சம்பவங்களிலுமே சம்பந்தப்பட்ட வாகனங்கள் வாடகை கார் தளமான டூரோவில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனிடையே டெஸ்லா காரில் பிரச்சினை இருந்து கார் வெடித்ததா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பினர். அதற்கு விளக்கம் தந்துள்ள எலான் மஸ்க், டிரம்ப் ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா கார் திடீரென தீப்பிடித்து வெடித்ததற்கு காரில் ஏற்பட்ட கோளாறு காரணமல்ல என விளக்கியுள்ளார். காரில் பட்டாசு போன்ற ஏதேனும் ஒரு பொருள் இருந்திருக்கிறது அது வெடித்ததால் தான் கார் தீப்பற்றி வெடித்திருக்கிறது என கூறியுள்ளார்.
வெடித்து சிதறும் அந்த சமயம் வரை காரில் எந்த கோளாறும் இல்லை என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது என தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை நடத்தி வருகிறது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications