எலான் மஸ்க் பல முக்கியமான நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அடுத்த 40 - 50 வருடத்திற்கான ரோடு மேப் போட்டுவிட்டு தனது வழியில் பயணம் செய்துக் கொண்டு இருக்கும் வேளையில் சமுகவலைத்தள துறையில் இருக்கும் பிரச்சனையை தீர்க்கவும், சீனாவில் இருக்கும் WECHAT போன்ற ஒரு தளத்தை உருவாக்கும் நீண்ட கால திட்டத்துடன் டிவிட்டரை வாங்கினார்.
சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவுகளான 80% ஊழியர்கள் பணிநீக்கம், டிவிட்டர் நிறுவனத்தின் பெயரை X என மாற்றியது வரையில் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை சந்தித்தப் பின்பு, தற்போது வெரும் 5 முதல் 20 பில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்படுகிறது.

டிவிட்டரின் ஆதிக்கத்தை குறைக்க மெட்டா நிறுவனம் THREADS அறிமுகம் செய்தாலும், டிவிட்டர் எனப்படும் X தளத்தில் தொடர்ந்து மக்கள் அதிகப்படியான நேரத்தை செலவிடுகின்றனர். THREADS தளத்தில் பல செலிப்ரிட்டிகள் நுழைந்தாலும் மைக்ரோ பிளாக்கிங் பிரிவில் தொடர்ந்து டிவிட்டர் எனப்படும் X தான் கெத்து காட்டி வருகிறது.
ஜூலை 24 ஆம் தேதி டிவிட்டரின் பெயர், பறவை லோகோ என அனைத்தையும் X என மாற்றிய எலான் மஸ்க், அதிகப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் எலான் மீது இருக்கும் நிம்பிக்கை, அவருடைய vision மீது இருக்கும் ஆர்வம் ஆகியை தொடர்ந்து டிவிட்டர் வாசிகள் கைகொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ X தலைமை அலுவலகத்தின் மாடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள X லோகோ-வின் லைட் செட்அப் வீடியோ எலான் மஸ்க் தனது X கணக்கில் பகிரப்பட்டு உள்ளது. இந்த வீடியோவை சுமார் 24.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர், இந்த வீடியோவுக்கு சுமார் 4700 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
இதில் முக்கியமாக சிலர் X லோகோ-வின் லைட் செட்அப் Batman rising போல உள்ளது எனவும், Mr.Beast தனது அலுவலகத்தின் மாடியிலும் இதுப்போன்ற செட்அப்-ஐ அமைக்க வேண்டும் என டிவீட் செய்துள்ளனர். பெரும்பாலான செலிப்ரிட்டிகள், கன்டென்ட் கிரியேட்டர்கள் டிவிட்டர் மற்றும் திரெட்ஸ் தளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளனர்.


Click it and Unblock the Notifications