எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X (முன்பு ட்விட்டர்), அதன் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தை மூடி, சான் ஜோஸ் மற்றும் பாலோ ஆல்டோவுக்கு இடம் பெயர்கிறது. இதுவரை கலிஃபோர்னியாவில் இருந்த எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமையகத்தை டெக்சாஸுக்கு மாற்றுவது குறித்து மஸ்க் முன்னதாகவே கூறி இருந்தார். கலிஃபோர்னியாவில் பள்ளிகளில் மாணவர்களின் ஜெண்டர் குறித்த தகவல்களை ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மாணவரின் அனுமதியின்றி வேறு எந்த நபருக்கும் தெரிவிக்கக் கூடாது என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எலான் மஸ்க்கின் சமூக ஊடக X அலுவலகம், அதன் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தை மூட உள்ளது. இது 2006-இல் நிறுவப்பட்ட நிறுவனம். இந்த முடிவை தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோ மெயில் மூலம் ஊழியர்களுக்குத் தெரிவித்தார். சான் ஜோஸ் மற்றும் பாலோ ஆல்டோவில் இருக்கும் அலுவலகங்களுக்கு ஊழியர்களை இடமாற்றம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

மஸ்க் தனது அதிகாரப்பூர்வ X-இல் தனது நிறுவனங்களான X மற்றும் SpaceX-இன் தலைமையகத்தை கலிபோர்னியாவிலிருந்து டெக்சாஸுக்கு மாற்றுவதாக ஜூலை மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு காரணமாக கலிஃபோர்னியா அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு புதிய சட்டத்தை எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தின்படி, பள்ளிகளில் மாணவர்களின் ஜெண்டர் குறித்த தகவல்களை ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மாணவரின் அனுமதியின்றி வேறு எந்த நபருக்கும் தெரிவிக்கக் கூடாது.
இது குறித்து மஸ்க் தனது X தளத்தில், இந்த சட்டத்தாலும், இதற்கு முன் வந்த பிற சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால், ஸ்பேஸ்எக்ஸின் தலைமையகம் கலிஃபோர்னியாவின் இருந்து டெக்சாஸின் ஸ்டார் பேஸுக்கு மாற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மஸ்க்கின் இந்த முடிவுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு காரணம். அவரது மகன் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் திருநங்கையாக மாறிக் கொண்டார். ஆனால், அதை தனது தந்தையான எலான் மஸ்க்கிடம் தெரிவிக்கவில்லை. இதனால் மஸ்க் மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications