ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

டொனால்டு டிரம்ப் தொடர்ந்து ஈரான் போர் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து அமெரிக்காவின் லைம்லைட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது ஏஐ குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் பேசுவது கூட மக்கள் மத்தியில் குறைந்துள்ளது. இந்த நிலையில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அமெரிக்க பொருளாதார வல்லுனர்களையும், டெக் வல்லுனர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதன் மூலம் டிரம்ப் பக்கம் வீசப்பட்ட போகஸ் லைட் தற்போது எலான் மஸ்க் பக்கம் திரும்பியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோடிக்ஸ் மற்றும் டேட்டா சென்டரில் பயன்படுத்த தேவையான சிறப்பு திறன்வாய்ந்த சிப்புகளை தயாரிக்கும் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த புதிய முயற்சி, தொழில்நுட்ப துறையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

'டெராஃபாப்' திட்டம்
மஸ்க் அறிவித்துள்ள "Terafab" எனப்படும் இந்த உற்பத்தி நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அஸ்டின் அருகே அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு, வருடத்திற்கு ஒரு டெராவாட் (Terawatt) அளவிலான கம்பியூடிங் செயல்திறனை உருவாக்கக்கூடிய சிப்புகளை தயாரிப்பதாகும்.

ஒரு டெராவாட் என்பது ஒரு டிரில்லியன் வாட்ஸ் மின்சாரத்துக்கு சமமானது. இது, அமெரிக்காவின் மொத்த மின்சார உற்பத்தி திறனை காட்டிலும் அதிகமாகும். இதுதான் தற்போது முக்கிய பேசு பொருளாக உள்ளது.

கற்பனைக்கு அப்பாற்பட்டது
சொந்தமாக சிப் தயாரிப்பது என்பது பெரிய விஷயமில்லை, கூகுள், ஆப்பிள் போன்றவை சொந்தமாக சிப் டிசைன் செய்து அதை தைவான் நிறுவனங்கள் தயாரிக்கிறது.

ஆனால் எலான் மஸ்க் சொல்வது கற்பனைக்கு அப்பாற்பட்டது, காரணம் எலான் மஸ்க் மற்றும் அவரின் நிறுவனங்களுக்கு அடிப்படையில் செமிகண்டக்டர் துறையில் அனுபவம் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் சிப் தயாரிப்பதாகவும், அவை உலகிலேயே மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா இதுநாள் வரையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விடவும் அதிகமாக தயாரிக்க தனிமனிதனான எலான் மஸ்க்-ம் அவரது நிறுவனமும் இலக்கு வைத்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதேபோல் இதற்கான கட்டமைப்பை உருவாக்குவது என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது.

விண்வெளியில் டேட்டா சென்டர்
எலான் மஸ்க்-ம் விண்வெளியில் டேட்டா சென்டர் அமைப்பது தொடர்பான திட்டங்களை வைத்துள்ளார். விண்வெளியில் டேட்டா சென்டர் அமைப்பதற்காக 10 லட்சம் செயற்கைகோள்களை நிறுவ Federal Communications Commission அமைப்பிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளது ஸ்பேஸ்எக்ஸ். ஏற்கனவே கூகுள், விண்வெளியில் டேட்டா சென்டர் அமைப்பது குறித்து திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா-ஸ்பேஸ்X முயற்சி
இந்த மெகா திட்டம், Tesla மற்றும் SpaceX ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக செயல்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். AI மற்றும் ரோபோடிக்ஸ் வளர்ச்சியால் கம்பியூட்டிங் பவரின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த திட்டம் அவற்றை நிறைவேற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

முதலீட்டு அளவு
எலான் மஸ்க் இந்த திட்டத்தின் முதலீட்டு விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், அமெரிக்க ஊடகங்கள் இந்த திட்டத்திற்கு ஆரம்பக்கட்டமாக 20 பில்லியன் முதல் 25 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யப்படலாம் என மதிப்பிட்டுள்ளன. இது, உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப முதலீடுகளில் ஒன்றாக அமையும்.

ஏன் இந்த திட்டம் அவசியம்?
சிப் உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனங்களான Samsung, TSMC மற்றும் Micron ஆகியவற்றின் உற்பத்தி திறன் ஒரு வரம்புக்குள் முடங்கி வருகிறது என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இந்நிறுவனங்கள் உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்தாலும் இதுி போதுமானதாக இல்லை.

Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் கம்பியூட்டிங் தேவைகள் எதிர்காலத்தில் இந்த உலகளாவிய சப்ளை அளவை விட அதிகமாக இருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால், தங்களுக்கு தேவையான சிப்புகளை தயாரிக்க தனி உற்பத்தி மையம் அமைப்பது அவசியமாகியுள்ளது என விவரித்தார்.

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

உற்பத்தி மையம்
Terafab திட்டத்தின் கீழ், சிப்புகளை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், சோதனை செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய அனைத்து கட்டங்களும் ஒரே இடத்தில் மேற்கொள்ளப்படும். இந்த முழுமையான (end-to-end) உற்பத்தி அமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றத்தை வேகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமி மற்றும் விண்வெளி இலக்குகள்
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, டெக்சாஸ் தொழிற்சாலை மூலம் 100 முதல் 200 கிகாவாட் அளவிலான கம்பியூடிங் பவர்-ஐ உருவாக்குவது, இதன் நீட்சியாக ஒரு டெராவாட் அளவுக்கு சிப் உற்பத்தியை விரிவாக்க திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க்.

2 வகை சிப்
எலான் மஸ்க் 2 வகை சிப்-களை தயாரிக்க உள்ளார், ஒரு சிப் Tesla கார்கள், robotaxis, humanoid robots, FSD-களில் பயன்படுத்தப்படும். மற்றொரு சிப் SpaceX மற்றும் xAI திட்டங்களில் பயன்படும். இதில் ஏஐ டேட்டா சென்டர்கள் மற்றும் விண்வெளியில் அமைக்கப்படும் டேட்டா சென்டர்களும் அடக்கம்.

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

எலான் மஸ்க் வேற லெவல்..
எலான் மஸ்க் முதன் முதலில் எலக்ட்ரிக் சூப்பர் கார் என அறிவித்த போதும் சரி, விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்-களை மீண்டும் பயன்படுத்தும் முறை குறித்து பேசும் போதும் சரி, முடக்குவாதம் சரி செய்ய சிப் கண்டு பிடிப்பதாக அறிவத்த போதும் சரி, செயற்கைகோள் வாயிலாக தடையற்ற இண்டர்நெட் சேவை அளிப்பதாக அறிவித்த போதும் சரி... அனைவருக்கும் தோன்றிய இதெல்லாம் சாத்தியமா என்பது தான்.

இப்போதும் சிப் தயாரிக்கும் அவரது திட்டம் இதே எண்ணத்தையை தான் கொடுக்கிறது. ஆனால் எலான் மஸ்க் இதை எப்படி சாத்தியப்படுத்துவார் என்பதில் ஆர்வம் அதிகமாக உள்ளது.

மனிதகுலத்தின் எதிர்காலம்
இந்த திட்டம் மனிதகுலத்தை "Galactic civilisation" என்ற நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக இருக்கும் என எலான் மஸ்க் விளக்கினார். மொத்தத்தில், Terafab திட்டம் தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது. இதேபோல் Terafab திட்டம் வரைவாக வெற்றிப்பெற்றால் என்விடியா, TSMC, சாம்சங் போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+