உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நாளில் இருந்து அதை எப்படித் தனது கனவுத் திட்டமான X App ஆக எப்படி மாற்றுவது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இதைத் தாண்டி டிவிட்டரை எப்படி விளம்பர வருவாய் பிடியில் இருந்து தப்பிக்க வைப்பது மட்டும் அல்லாமல் மாற்று வருவாய் ஈட்டும் தளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
ஆனால் இதற்கு அதிகப்படியான பணம் வேண்டும், இதற்காக எலான் மஸ்க் என்ன செய்துள்ளார் தெரியுமா..?
டிவிட்டர் திட்டம்
டிவிட்டரின் வருவாய் ஈட்டும் திட்டத்தை அடிப்படையில் இருந்தே சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே எலான் மஸ்க் ப்ளூ டிக் பெற 8 டாலர் கட்டணம், வீடியோ சேவை, பேமெண்ட் ஆகியவற்றைச் சேவைகளைக் கொண்டு வரும் பணிகளைச் செய்து வருகிறார் எலான் மஸ்க்.
இதேவேளையில் டிக்டாக் -கிற்குப் போட்டியாக Vine-ம், யூடியூப்-க்கு போட்டியா நீண்ட நேர வீடியோ சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் டிவிட்டரை சுமார் 46.5 பில்லியன் டாலர் செலவில் கைப்பற்றி இருந்தாலும், நிறுவனத்தை இயக்கவும், விரிவாக்க பணிகளுக்கு முதலீடு செய்யவும் வொர்கிங் கேப்பிடல் மிகவும் அவசியம். டிவிட்டரை கைப்பற்றுவதற்காக ஏற்கனவே அதிகப்படியான கடன்களை வங்கியுள்ள எலான் மஸ்க், இனியும் கடன் வாங்க முடியாது.
டெஸ்லா பங்குகள் விற்பனை
இந்த நிலையில் எலான் மஸ்க் வேறு வழியே இல்லாமல் தன்னிடம் இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 19.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து சுமார் 3.95 பில்லியன் டாலர் அளவிலான பணத்தைத் திரட்டியுள்ளதாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார் எலான் மஸ்க்.
20 பில்லியன் டாலர்
இந்த விற்பனை மூலம் எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் முதல் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாத விற்பனைக்குப் பின்பும் எலான் மஸ்க் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்யத் திட்டம் இல்லை எனக் கூறிய மஸ்க் மீண்டும் விற்பனை செய்துள்ளது முதலீட்டாளர்களுக்குப் பெறும் ஏமாற்றமாக மாறியது.
டெஸ்லா பங்கு விலை
இதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டெஸ்லா பங்குகள் 2.93 சதவீதம் வரையில் சரிந்து 191.30 டாலராகச் சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்லா பங்குகள் 52.17 சதவீதம் வரையில் சரிந்து சுமார் 208 டாலர் சரிந்துள்ளது, டெஸ்லாவின் 52 வார உச்ச விலை 402.67 டாலராகும்.
சொத்து மதிப்பு
இதன் மூலம் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 197.4 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது, ஆனாலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் எலான். செப்டம்பர் 2021ல் டெஸ்லா பங்குகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.
ஜெப் பெசோஸ் - பெர்னார்டு அர்னால்ட்
இந்தத் தடாலடி வளர்ச்சியில் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் மற்றும் பெர்னார்டு அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார். 2021 செப்டம்பர் முதல் தொடர்ந்து 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு வைத்திருந்தார் எலான் மஸ்க்.
200 பில்லியன் டாலர் கிளப்
எலான் மஸ்க் சொத்து மதிப்பு மே 24, 2022ல் 199 பில்லியன் டாலராகச் சரிந்து சிறிது நேரத்திலேயே 200 பில்லியன் டாலருக்குச் சென்றது. 14 மாதத்திற்குப் பின் எலான் மஸ்க் சொத்து மதிப்பு $200 பில்லியன் கீழ் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்கு எலான் மஸ்க்-ன் 4 பில்லியன் டாலர் டெஸ்லா பங்கு விற்பனையும் முக்கியக் காரணமாகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications