உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பல துறையில் இயங்கி வந்தாலும் இணைய சேவையில் பெரும் புரட்சியை செய்து வருகிறார். எலான் மஸ்க் சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் செயற்கைகோள் வாயிலாக இண்டர்நெட் சேவையை அளிக்கும் ஸ்டார்லிங்க் சேவையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக விமானத்தில் அதிவேக இண்டர்நெட் சேவையை அளிக்கும் வசதியை சில வருடங்களுக்கு முன்வைத்தார்.
விமானத்தில் இணைய தளம் அளிக்கும் வசதி பல ஆண்டுகளாக இருந்தாலும், இதன் வேகம் என்பது சிறப்பானதாக இல்லை. இதேபோல் விமானத்தில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இச்சேவையை அளித்து வந்த நிலையில், இதை உடைக்கும் விதமாக எலான் மஸ்க் இத்துறையில் இறங்கினார்.

எலான் மஸ்க் விமானத்தில் அதிவேக இண்டர்நெட் சேவை அளிப்பதற்காக, கத்தார் ஏர்வேஸ் உடன் அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் விமானத்தில் உள்ள ஒவ்வொரு பயணிகளுக்கும் ஸ்டார்லிங்க் வைஃபை மூலம் கட்டணம் ஏதுமின்றி இணைய வாய்ப்பு கிடைக்கும்.
இந்த ஒப்பந்தம் குறித்து வெளியான அறிக்கையின் படி ஸ்டார்லிங்க் வைஃபை மூலம் 350 Mbps வரை வேகத்துடன் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அதிவேக இண்டர்நெட் சேவையை பெற முடியும். இந்த ஒப்பந்தம் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்கின் மிகப்பெரிய விமானப் பங்குதாரராக மாற்றியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் விமான பயணிகளுக்கான இண்டர்நெட் சேவைக்கான கட்டணத்தை நீக்குவது மட்டுமின்றி, டவுன்லோடு வேகத்தில் கணிசமான மேம்பாட்டை உறுதி செய்கிறது. தற்போது QR கோடு மூலம் இயங்கும் Super WiFi சேவையின் வேகம் வெறும் 10 Mbps வேகத்தை வழங்குகிறது.
கத்தார் ஏர்வேஸ் மற்றும் எலான் மஸ்க் கூட்டாணி மூலம், ஒரு நபர் 350 Mbps என்ற உண்மையான பிராட்பேண்ட் வேகத்தை விமான பயணிகள் பெற முடியும்.
கத்தார் ஏர்வேஸ் இந்தச் சேவை செயல்படுத்தப்பட்டவுடன், விமான பயணிகள் வினாடிக்கு 350 MBPS வரையிலான அதிவேக வைஃபை வேகத்தை அனுபவிப்பார்கள் என்று உறுதியளிக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு கேமிங், VPN அணுகல், ஸ்ட்ரீமிங் போன்ற செயல்பாடுகளை எளிதாக்கும்.


Click it and Unblock the Notifications