உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் சேவை மூலம் அதிவேக பிராட்பேன்ட் சேவையை அளிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு ஸ்டார்லிங்க் சேவைக்கான ப்ரீ ஆர்டர் சேவையை அளிக்கவும், ப்ரீ ஆர்டர் பெறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்
இந்தியாவில் இன்னும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவைக்கு உரிமம் அளிக்கப்படவில்லை, இதனால் இந்திய மக்கள் ஸ்டார்லிங்க் சேவையை முன்பதிவு செய்ய வேண்டாம் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது ஸ்டார்லிங்க் சேவையை ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஸ்டார்லிங்க சேவை
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தற்போது ஸ்டார்லிங்க சேவையை 99 டாலர் விலையில் ப்ரீ புக்கிங் சேவையை அளிக்கிறது, இதை நிறுத்தவே தற்போது மத்திய டெலிகாம் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய அரசு விதிகள்
இதுகுறித்து மத்திய டெலிகாம் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கு லைசென்ஸ் கொடுக்கப்படாத பட்சத்தில் மக்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஸ்பேஸ்எக்ஸ் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசு விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியது மட்டும் அல்லாமல் புக்கிங் போன்ற சேவைகளை அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
5000 பேர் ப்ரீபுக்கிங்
இந்திய அரசின் இத்தகைய அறிவிப்பு எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சஞ்சய் பார்கவா கூறுகையில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்காகச் சுமார் 5000 பேர் ப்ரீபுக்கிங் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications