இந்தியாவுக்கு எப்படியாவது தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா கார்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு திட்டமிட்ட முன்பே செயற்கைகோள் வாயிலாக இயங்கும் பிராட்பேண்ட் சேவையான ஸ்டார்லிங்க் சேவையை கொண்டு வர முயற்சியை துவங்கினார்.
இதற்காக பெங்களூரில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்திய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது மறக்க முடியாது. பல தடைகள், பல தோல்விகளை கடந்து அமெரிக்காவுக்கு மோடியின் சமீபத்திய சுற்று பயணத்திற்கு பின்பு எலான் மஸ்க் தலைமையிலான இந்திய நிர்வாகம் ஸ்பேஸ்எக்ஸ் கீழ் செயல்படும் ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியை செய்தது.

இந்த முயற்சி பலன் கொடுத்துள்ள நிலையில் விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை கொண்டு வர மத்திய டெலிகாம் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதி மத்திய அரசின் உயர்மட்ட அதிகார குழு ஸ்டார்லிங்க்-ன் global mobile personal communication by satellite (GMPCS) சேவைக்கான உரிமம் குறித்த விண்ணப்பத்தின் மீதான முடிவை எடுக்க உள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் சேவை அளிப்பதற்கான GMPCS உரிமத்தை பெற்றுவிட்டால், பிற அரசு அமைப்புகள் குறிப்பாக விண்வெளி துறையின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். இந்த சேவை இந்திய பிராட்பேண்ட் சேவை தளத்தை தலைகீழாக மாற்றப்போகிறது, இதனால் போட்டியும் சற்று அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் செயற்கைகோள் வாயிலாக இண்டர்நெட் சேவை அளிக்க 4 நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஏர்டெல் உரிமையாளர் சுனில் மிட்டல் முதலீட்டில் இயங்கும் ஓன் வெப், SES கூட்டணியில் முகேஷ் அம்பானியின் ஜியோ, அமேசான் ஜெப் பெசோஸ்-ன் ப்ராஜெக்ட் குனிப்ர் ஆகியவை இந்திய சந்தைக்குள் நுழைய திட்டமிட்டு வருகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் தற்போது எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் வருகை பிராட்பேண்ட் சேவையில் பெரும் மாற்றத்தை உருவாக்கும்.


Click it and Unblock the Notifications