இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தொலைதொடர்பு சேவைகளையும் பிராட்பேண்ட் சேவைகளையும் வழங்குகின்றன. இவற்றுக்கு எல்லாம் போட்டியாக எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் களமிறங்க உள்ளது.
ஸ்டார்லிங்கை பொறுத்தவரை செயற்கைக்கோள் வாயிலாக தகவல் தொடர்பு சேவைகளை வழங்குகிறது. செயற்கைகோள்கள் வாயிலாக நேரடியாக டேட்டா சேவைகளை வழங்குவதால் இதன் மூலம் இணைய சேவை வேகமாக கிடைக்கிறது என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். எனவே தான் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகள் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஏற்கனவே இந்திய சந்தையில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் ஈர்க்கும் பொருட்டு முதல் கட்டமாக ஸ்டார்லிங்க் நிறுவனம் 840 ரூபாய்க்கு அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் பார்த்தால் 10 டாலருக்கும் கீழ் அன்லிமிடெட் டேட்டா சேவையை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.
இந்திய சந்தையில் குறைந்தது 10 மில்லியன் வாடிக்கையாளர்களையாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தொடக்கத்தில் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய சந்தையை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் குறைந்த தொகையிலேயே இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் முன் வரும் என Analysys Mason என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான அஸ்விந்தர் சேத்தி தெரிவிக்கிறார். இந்தியாவின் தொலைதொடர்புத்துறை ஆணையமான டிராய் சாட்டிலைட் மூலம் இணையசேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிகபட்ச உரிம கட்டணங்களை விதித்துள்ளது. இது ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை ஈர்த்து தக்க வைப்பதில் தான் முதலில் அவை கவனம் செல்லும் என அவர் கூறுகிறார்.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஒரு தொலைதொடர்பு சந்தையாக இந்தியா திகழ்ந்து வருகிறது. தற்போது 7 ஆயிரம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி ஸ்டார்லிங்க் 4 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 18,000 ஆக அதிகரித்தால் இந்தியாவில் 1.5 மில்லியன் சந்தாதாரர்களுக்கு சேவை வழங்க முடியும் என ஐஐஎஃப்எல் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் 8 லட்சம் டவர்களை நிறுவி வாடிக்கையாளர்களுக்கு இணைப்புகளை வழங்குகின்றன. இத்துடன் போட்டியிட வேண்டும் என்றால் எலான் மஸ்க் இந்தியாவிற்கு பிரத்தியேகமாக சேவை வழங்குவதற்கு என செயற்கைக்கோள்களை அதிகரிக்க வேண்டி இருக்கும் என ஐஐஎஃப்எல் ஆய்வு அறிக்கை கூறுகிறது. சர்வதேச அளவில் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் சேவைகளுக்கு ஒரு மாதத்திற்கு 500 டாலர்கள் வரை கட்டணமாக பெறுகிறது. இதுவே இந்தியாவை சேர்ந்த தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் 5 லிருந்து மாதத்திற்கு 7 டாலர்கள் வரையிலேயே கணிசமான டேட்டா சேவைகளை வழங்கி விடுகின்றன.
இத்துடன் பல்வேறு ஓடிடி செயலிகளும் இலவசமாக கிடைத்து விடுகின்றன. எனவே இந்திய சந்தையை பொறுத்தவரை ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு கட்டணம் நிர்ணயம் செய்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என ஜேஎம் பைனான்சியல் நிறுவனம் கூறுகிறது. இந்த பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடைக்க உதவினால் நன்றாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications