டிஜிட்டல் மற்றும் மார்டன் தொழில்நுட்ப உலகின் ஐன்ஸ்டீன் என போற்றப்படும் எலான் மஸ்க் பல துறையில் இதுவரையில் யாரும் செய்ய முடியாத விஷயங்களை சாதித்துக்காட்டியவர். டிவிட்டர் மூலம் சில தடுமாற்றங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொண்டு வந்தாலும் தற்போது எக்ஸ் கார்ப் நிறுவனத்தில் சேர்த்தது மூலம் டிஜிட்டல் உலகில் புரட்சியை உருவாக்க உள்ளார் எலான் மஸ்க்.
இந்த நிலையில் டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பெரும் எழுச்சி உலகம் முழுவதும் உருவாக்கியிருக்கும் வேளையில் GPT என்ற முக்கிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய OpenAI நிறுவனத்தில் ஆரம்பக்கட்டத்தில் எலான் மஸ்க் உதவியிருந்தாலும், இதில் இருந்து வெளியேறினார். தற்போது AI தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கண்டு மீண்டும் எலான் மஸ்க் AI துறைக்குள் நுழைய முடிவு செய்துள்ளார்.

வெள்ளிக்கிழமை வெளியான தகவல் படி எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு துறையில் புதிதாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிறுவனம் கட்டாயம் OpenAI நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக மாறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்திற்காக எலான் மஸ்க் டெக் இன்ஜினியர்களையும், முதலீட்டாளர்களையும், அதிநவீன கருவிகளையும் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இப்புதிய செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு உள்ள எலான் மஸ்க் சரியான திறன்களை கொண்ட இன்ஜினியர்கள் தேர்வு செய்வது தான் கடினம், இதை செய்து விட்டால் எலான் மஸ்க் வழக்கம் போல் தனது வேகத்தில் செயல்பட துவங்கிவிடுவார். இப்புதிய ஸ்டார்ட்அப் மூலம் எலான் மஸ்க் புதிய large language model-ஐ உருவாக்க உள்ளார்.

இதவேளையில் சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இன்ஜினியர்களை தனி குழுவாக உருவாக்கினார் என தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்க எலான் மஸ்க் தனது டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணத்தை போட்ட முதலீட்டாளர்களிடம் புதிய முதலீட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் கட்டாயம் A16Z நிறுவனம் இருக்கும்.
எலான் மஸ்க் ஏற்கனவே DeepMind நிறுவனத்தில் இரு மூத்த ஆராய்ச்சியாளர்களை தனது நிறுவனத்தில் பணியாற்ற ஈர்த்துள்ளார், இது மட்டும் அல்லாமல் 10000 graphics processing units (GPUs) வாங்கியுள்ளார். இது AI மற்றும் high-end graphics செயல்களை செய்யக்கூடிய திறன் கொண்டவை.


Click it and Unblock the Notifications