உலகின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், உலக மக்கள் சுதந்திரமாக பேசுவதற்கான தளத்தை உருவாக்குவதற்கும், தனது பிடித்த டிவிட்டர் தனக்கான சுதந்திரத்தை கொடுக்க மறுக்கும் வேளையில் சுமார் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கி சில மாதங்களிலேயே 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளை பெரிய அளவில் கட்டுப்படுத்தினார் எலான் மஸ்க்.
இவருடைய கட்டுப்பாட்டில் டிவிட்டர் தளத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், பல போலி தகவல்கள் பரவுவது அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்தி வருவதில் எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்கள் உடன் இணைந்து களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இண்டர்வியூவ் ஒன்றில் கலந்துக்கொண்ட எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி 6 மாதம் முடிந்த நிலையில், இன்னும் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் 7வது மாடியில் இருக்கும் லைப்ரரி-யில் தான் தூங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
டிவிட்டரை லாபகரமான நிறுவனமாக மாற்றும் வரையில் டிவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற திட்டம் இல்லை என எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். எலான் மஸ்க் தனக்கு சொந்தமான மிகப்பெரிய வீட்டை விற்பனை செய்துவிட்ட நிலையில், சில காலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ஏவுதளத்தில் இருக்கும் ஒரு காம்பெக்ட் வீட்டில் தங்கியிருந்தார்.

டிவிட்டரை கைப்பற்றிய பின்பு தற்போது டிவிட்டர் அலுவலகத்தில் தங்கி வருகிறார். எலான் மஸ்க் X.COM நிறுவனத்தை துவங்கும் போது வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் வாடகை கொடுக்க முடியாமல் இருந்த நிலையில், அலுவலகத்திலேயே பல வருடங்கள் தூங்கினார். இதன் பின்பு டெஸ்லா நிறுவனத்தை கைப்பற்றிய பின்பு பல நாட்கள் டெஸ்லா கான்பிரன்ஸ் ரூம்-ல் தூங்கினார், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் லான்ச் போது பெரும்பாலான நாட்கள் தொழிற்சாலை, அலுவலகத்திலேயே தூங்கினார்.
இது தற்போது டிவிட்டர் நிறுவனத்திற்கும் தொடங்கியுள்ளது, டிவிட்டர் ஊழியர்களும் இரவு அலுவலகத்தில் தங்க அலுவலகத்திலேயே கட்டில், பெட் போடப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். சரி டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ யார்..? எலான் மஸ்க்-ஆ அல்லது அவர் செல்லமாக வளர்க்கும் Folki என்ற நாய்-ஆ, பதிலை கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications