எலான் மஸ்க் மிகவும் குறைந்த காலத்திலேயே உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் நுழைந்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.
ஏற்கனவே எலான் மஸ் கையில் 5 நிறுவனங்கள் வெவ்வேறு துறையில் இயங்கும் நிறுவனங்களை வைத்துள்ள நிலையில் தற்போது மக்களுக்குச் சுதந்திரமாகப் பேச வாய்ப்பையும், அதற்கான தளத்தையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் பெரும் தடுமாற்றத்திற்குப் பின்பு டிவிட்டர் நிறுவனத்தின் Deadline-க்கு ஒரு நாள் முன்னதாகவே கைப்பற்றியுள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய செய்தி உறுதியான அடுத்த நிமிடம் டிவிட்டர் நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தொடுத்த வழக்கின் விசாரணையில் எலான் மஸ்க் மனம் மாறி டிவிட்டர்-ஐ கைப்பற்ற விரும்புவதாக அறிவித்தார். இதைத் தொரட்ர்ந்து நீதிமன்றம் அக்டோபர் 28 அதாவது வெள்ளிக்கிழமைக்குள் கைப்பற்றியாக வேண்டும் என உத்தரவிட்டது.
44 பில்லியன் டாலர்
இதன் வாயிலாக எலான் மஸ்க் ஏற்கனவே டிவிட்டரை கைப்பற்ற போதுமான பணத்தைத் தயாராக வைத்திருந்த நிலையில் தற்போது எலான் மஸ்க் மன மாற்றத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே அனைத்துக் கைப்பற்றுவதற்கான பணிகள் வேகமெடுத்த நிலையில் டெட்லைக்கு ஒரு நாள் முன்னதாகவே டிவிட்டர் பங்குகளை மொத்தமாக 44 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
3 உயர் அதிகாரிகள்
இந்தச் செய்தி வெளியான அடுத்த நொடியில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதியியல் அதிகாரி Ned Sega, சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே ஆகியோர் டிவிட்டர் நிறுவன பணியில் இருந்து வெளியேறினர்.
பராக் அகர்வால்
டிவிட்டரை கைப்பற்றும் முன்னரே டிவிட்டர் நிர்வாகத்திற்கும் எலான் மஸ்க்-கிற்கும் அதிகப்படியான மோதல் இருந்த நிலையில், சில நேரத்தில் பராக் அகர்வால்-ம் எலான் மஸ்க்-ம் டிவிட்டரில் காரசாரமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
ராஜினாமா / பணிநீக்கம்..??
இது மட்டும் அல்லாமல் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றினால் முதலில் செய்யக் கூடிய வேலை பராக் அகர்வால் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கக் கூடிய அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது தான் இருக்குமெனப் பலரும் கணித்திருந்த நிலையில் தற்போது அவர்களாகவே வெளியேறியுள்ளனர் எனச் செய்தி வரும் இதேவேளையில் எலான் மஸ்க் தான் 3 பேரையும் பணிநீக்கம் செய்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் ஊழியர்கள்
மேலும் டிவிட்டர் ஊழியர்கள் மத்தியில் எலான் மஸ் கைப்பற்றினால் 75 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனச் செய்தி வெளியான நிலையில் இது பொய் என்பதை நிரூபணம் செய்ய எலான் மஸ்க் நேரடியாக அலுவலகம் வந்து 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என உறுதி அளித்தார்.
2 இந்தியர்கள்
இதைத் தொடர்ந்து தற்போது எலான் மஸ்க் டிவிட்டரில் பறவைக்குச் சுதந்திரம் கிடைத்தது என டிவீட் செய்துள்ளார். இதன் மூலம் டிவிட்டரை எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிவிட்டரை வெளியேறிய / பணிநீக்கம் செய்யப்பட்ட 3 பேரில் 2 இந்தியர்கள் என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications